Thursday, November 04, 2010

தீபாவளிப் பாட்டு

சமீபத்தில் தீபாவளியின் கதை என்ன என்பதைப் பற்றி அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் தீபாவளி இராமன் அயோத்தி திரும்பி முடிசூட்டிய நாளென்றார். இன்னொருவர், கண்ணன் நரகாசுரனை வதைத்த நாள் என்றார். அது எப்படி இரண்டு தொடர்பில்லாத இதிகாசங்களிலும் தொட்டுத் தொடர்ந்தது இந்த தீபாவளி என இருவரும் வியந்தனர்.

தீபாவளி கொண்டாடுவதற்கு அவரவர் மாநிலத்தில் அவரவர்க்கு காரணங்கள் வேறாக இருக்கலாம். அது எல்லோருக்கும் இருள் முடிந்து நன்மைகள் பிறக்கும் நன்னாளாக அமைய வேண்டும். அவ்வாறு அனைவருக்கும் அமைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இந்த பதிவில் மத்யமாவதி இராகத்தில் தீபாவளிப் பாட்டொன்று பார்க்கலாமா!
பாடலில் மத்யமாவதியின் அம்சம் அப்படி அருமையாக வெளிப்படும்படி இயற்றியிருப்பார் பாபநாசம் சிவன் அவர்கள்.
பூமி பிராட்டி தோரோட்ட & மங்கள தீபாவளி ஒளி - என்ற இடங்களில் எதுகை நயம் அழகாய் மிளிரும்!

இராகம் : மத்யமாவதி
தாளம் : ஆதி
இயற்றியவர் : பாபநாசம் சிவன்
பாடுபவர் : காயத்ரி வெங்கட்ராகவன்






எடுப்பு

கண்ணா காத்தருள் மேகவண்ணா
கடைக்கண் பார்த்தருள் கமலக்கண்ணா

தொடுப்பு
விண்ணாடரும் முனிவரும் வணங்கிவேண்ட
நரகாசுர வதம் செய்ய விரைந்துவந்த
(கண்ணா...)

முடிப்பு
பாமை வடிவான பூமிபிராட்டி தேரோட்ட
அசுரர் குலம் அழத்தவா!
சக்ரபாணி! உலகெலாம்
மங்கள தீபாவளி ஒளி
வீச அருள் புரிந்த (கண்ணா...)

10 comments:

  1. மங்கள இசைக்கு மத்யமாவதி எத்துணை பொருத்தம் !!
    மங்கள தீபாவளி ஒளி வீச
    இசை புரிந்த கண்ணா ...!!
    இப்புவிதனைக் காத்தருள்வாய் !!

    நண்பர் ஜீவா அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் ஜீவா அவர்கள் வலைப்பதிவுக்கு வருகை தரும்
    அத்துணை நல் உள்ளங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்.
    ஆசிகள்.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com
    http;//pureaanmeekams.blogspot.com

    ReplyDelete
  2. வாங்க சுப்புரத்தினம் ஐயா,
    வாழ்த்துக்களுக்கு நன்றிகள். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    மங்களம் பாடவும் மங்களமாய்ப் பாடவும்

    மத்யமாவதி மனமதி நிறை வாணி!
    சிவன் அவர்கள் எவ்வளவு பொருத்தமாய்

    இயற்றி இருக்கிறார்!

    ReplyDelete
  3. ஜீவா,
    இன்றைக்கு இதே டயலாக் (தீவாளிக்கு ராமர் தான் காரணம் என்று என் வடக்கிந்திய நண்பரும், இல்லை கிருஷ்ணர் தான்னு நானும் பேசிட்டு வீட்டுக்கு வந்தா, துளசி டீச்சர் விஸ்தாரமா எத்தனை நாள் சண்டிகர்ல தீவாளின்னு போட்டிருக்காங்க:) எனக்கும்.....

    மங்களம் பாட மத்யமாவதி! எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. வாங்க கேபியக்கா,
    தீபாவளி வாழ்த்துகள்!
    டீச்சருக்கு யாதும் ஊரே! யாவரும் கேளிர்!
    நமக்கு இந்த ஊரு வட இந்தியர்கள் தான் கிடைச்சாங்க!

    ReplyDelete
  5. குட்டிக் கண்ணன் படம் நல்லாக இருக்கிறது.

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ஜீவா. அருமையான பாடலுடன் கூடிய பதிவு. வட மாநிலங்கள் ஸ்ரீராமரையும், தென் மாநிலங்கள் ஸ்ரீகிருஷ்ணர் நரகாசுரன் கதையையும் பிடிச்சுக்கிறது. குஜராத், ராஜஸ்தானில் புதுவருடமும் இப்போத் தான். நம்ம ஆயுத பூஜை, தீபாவளி, கார்த்திகை, பொங்கல் எல்லாப்பண்டிகைகளின் சம்பிரதாயங்களையும் வட மாநிலத்தவர்கள் இந்த தீபாவளிப்பண்டிகையை ஐந்து நாட்களில் கொண்டாடி முடிக்கின்றனர். சகோதரனுக்காகக் கொண்டாடும் பாயிதூஜ் பண்டிகையும் இதில் அடக்கம்.

    ReplyDelete
  7. வாங்க மாதேவி அக்கா,
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    குட்டிக் கண்ணன் படுசுட்டி!
    சுட்டிக் கண்ணன் படுகெட்டி!
    பல்லைக் காட்டு என்
    றால் வாயைத் திறப்பான்
    !
    வாயைத் திற என்றால் உலகைக் காட்டுவன்!
    பொல்லாத கண்ணன் இல்லாத இடமில்லை!

    ReplyDelete
  8. வாங்க கீதாம்மா,
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    இராமரும் கண்ணன்ம் வேறல்லவே!
    கேரளாவில் மகாபலி சக்ரவர்த்தி முடிசூட்டியநாள் எனவும் கொண்டாட்டம் அல்லவா!

    தீபாவளி ஒளி வீச விரைந்து வந்ததுபோல
    கண்ணன்
    தீமைகள் தீர விரைந்து வர வேண்டும்.

    ReplyDelete
  9. தீபாவளி வாழ்த்துக்கள் ஜீவா

    நல்லதொரு பாடலுக்கும் நன்றி

    ReplyDelete
  10. வாங்க பிரபா
    !
    தீபாவளி வாழ்த்துக்கள்!
    உங்க தீபாவ
    ளி இசை விருந்து நன்
    றாக இருந்தது!

    ReplyDelete