Sunday, October 17, 2010

ஏதும் கலக்கம் இலன்.

ஆடும் அரவம் படம்பிடித் தாடுமண்ணல்
ஆடும் அகிலமாம் அம்பலம் தன்னைப்
பாடும் நாவினில் நின்ற நாதன்
நாமம் நமசிவாய வே.

நாளும் தேடும் இடமும் பலப்பலவாம்
நாளும் தேடும் பொருளும் பலப்பலவாம்
யாதும் ஒன்றென ஈசன் மலர்பதமென
அறியா மாந்தர் கலக்கம் யாதும்
தீர்க்கும் மருந்தென
ஈர்க்கும் திருநீறென
சேர்க்கும் அவனடி சேர் அடியார்
நாற்கவி போற்றும் நாதன்
நாமம் நமசிவாய வே.

பாலும் தெளிதேனும் நாலும் இரண்டும்
நவிலும் தேன்சொல் மறைநெறி சாரமதை
நாடும் நெஞ்சில் ஓதும் சொல்லில்
ஏதும் கலக்கம் இலன்.

7 comments:

  1. நாதனும் அவனே ! நாதமும் அவனே !
    நானிலம் உய்ய ஒரு வழியும் அவனே !

    நமசிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க !

    சுப்பு ரத்தினம்.
    http://ammanpaattu.blogspot.com

    ReplyDelete
  2. புது டெம்ப்லேட் இப்பதான் பார்க்கிறேண். நல்லா இருக்கு.
    பாடல்களும் பொருள் பொதிந்தவை. பிடித்தது.

    ReplyDelete
  3. //பாலும் தெளிதேனும் நாலும் இரண்டும்
    நவிலும் தேன்சொல் மறைநெறி சாரமதை
    நாடும் நெஞ்சில் ஓதும் சொல்லில்
    ஏதும் கலக்கம் இலன்.//

    super.

    ReplyDelete
  4. வாங்க சூரி சார்,

    நமசிவாய வாழ்க !
    நாதன் தாள் வாழ்க !

    ReplyDelete
  5. வாங்க்க திவா சார்!
    புது டெம்ப்ளேடுக்கு எல்லாரும் மாறிட்டாங்க, நானும் மாறிட்டேன்!
    பேஸ்புக் லிங்க் வேலை செய்யணுமே,
    login பண்ண வேண்டி இருக்கும்.

    ReplyDelete
  6. வாங்க மதுரை சரவணன்,
    தங்களுக்கு பிடித்திருந்தது மகிழ்ச்சி!

    ReplyDelete