Wednesday, September 15, 2010

முரண்களின் அரண்

காற்றே உன்னை வேற்றூருக்கு
திருப்பி விடவா?

கவிதையே உன்னை அயலூருக்கு
அனுப்பி விடவா?

பெற்றுத் தருவதற்கு அரிதான விடியல்
முற்றுப் பெறுவதோ அன்றாடம்!

உறக்கம் கலைந்தவுடம் கனவுகள் மட்டும்
பறப்பது ஏன்?

விற்றுத் தீர்ந்துபோன செங்கல் யாதும்
சுற்றுச்சுவரில் இடம்பெறுமோ?

அகலும் மோதிரம் விரல்கள் மெலிந்ததை
அறிவிக்கின்றதோ?

சரித்திரம் சொல்லும் சாக்ரடீஸ் கதைகள் மட்டும்
சாகாவரம் பெறுவது ஏன்?

மௌனத்தின் மொழியில் ஓசை நயத்தினை
மனதிற்குமட்டும் உரைப்பது யார்?

முரண்களின் அரணில் விழுந்த வட்டத்தில்
முளைத்துதான் புதுக்கவிதையோ?

4 comments:

  1. கவிதை அழகாக வந்திருக்கிறது.
    கவிதையில் படிந்திருக்கும் அந்த சோகத்தை மட்டும், தொலைதூரத்திற்கு அனுப்ப முடியாதா, என்ன?..

    //காற்றே உன்னை வேற்றூருக்குத்
    திருப்பி விடவா?..//

    ஓஹ்.. கவிதைக்கு பொய்யழகு என்பதும் அழகாய்த் தான் இருக்கிறது!

    //முரண்களின் அரணில் விழுந்த வட்டத்தில்
    முளைத்ததுதான் புதுக்கவிதையோ?../

    ஹஹ்ஹஹ்ஹா..முத்தாய்ப்பு அற்புதம்!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வாருங்கள் ஜீவி ஐயா,
    வாத்துக்களுக்கு நன்றிகள்!
    நீங்கள் வேற்றூர் என பின்னூட்டத்தில் இட்டதுபோலவே வேறூரை நானும் மாற்றிவிட்டேன்!

    இன்று காலை மனதில் ஏற்பட்ட வரிகளை

    வடித்து விட்டேன். அது கவிதையாய் இருப்பது மகிழ்ச்சி!

    ReplyDelete
  3. //மௌனத்தின் மொழியில் ஓசை நயத்தினை
    மனதிற்குமட்டும் உரைப்பது யார்?
    //

    பேசுவதில் ஓசை இருக்கும்
    பேசாத பேச்சிலோ இசை இருக்கும்.
    பேசுவதில் நவ ரசம் இருக்கும் நாடகமமும் இருக்கும்
    பேசாத பேச்சிலோ நயம் இருக்கும் நாணம் இருக்கும்
    பேசுவதில் மனம் திளைப்பதில்லை .
    மெளனத்தில் மனம் உறங்குவதில்லை.

    சுப்பு ரத்தினம்.
    http://kandhanaithuthi.blogspot.com
    http://Sury-healthiswealth.blogspot.conm

    ReplyDelete
  4. வாங்க சுப்புரத்தினம் ஐயா.
    பேசுவதிலும் பேசாதிருத்தலிலும் என்னென்னவென இருக்குமென பட்டியலிட்டு விட்டீர்கள்!

    ReplyDelete