Wednesday, January 13, 2010

விஷ்ணு மாயா ஸ்தோத்திரம்

விஷ்ணு மாயா ஸ்தோத்திரம்

1. நமோ தேவ்யை மஹாதேவ்யை சிவாயை தைதம் நம :|
நம: ப்ரக்ருத்யை பத்ராயை நியதா: ப்ரணதா: ஸ்மதாம் ||

(தேவிக்கு வணக்கம். பெருந்தேவிக்கு வணக்கம். எப்போதும் மங்களகரமாய் இருப்பவளுக்கு வணக்கம். இயற்கை வடிவினவளுக்கு வணக்கம். இனிமையானவளுக்கு வணக்கம்.
தேவியே உன்னை நியமப்படி வணங்குகிறோம்.)

2. ரௌத்ராய நமோ நித்யாயை கௌர்யை தாத்ர்யை நமோ நம:|
ஜ்யோத்ஸ்னாயை சேந்துரூபிண்யை ஸூகாயை ஸததம் நம:||

(கோப வடிவினவளும் நிலையானவளும் அனைத்தையும் தாங்குபவளும் பாதுகாப்பவளும் ஆகிய தேவிக்கு வணக்கம். நிலவு போன்ற ஒளி வீசும் அழகிய முகத்தை உடையவளும் எப்போதும் ஆனந்தமாக இருப்பவளுமான அன்னைக்கு நமஸ்காரம்.)

3. கல்யாண்யை ப்ரணதாம் வ்ருத்யை ஸித்யை குர்மோ நமோ நம:|
நைர்ருத்யை பூப்ருதாம் லக்ஷ்ம்யை ஸர்வாண்யை தே நமோ நம:||

(பணிந்திடுவோர்க்கு எப்போதும் நல்லதையே கொடுப்பவளும் உயர்வான குணங்களை உடையவளும், சித்தியளிப்பவளுமான தேவிக்கு வணக்கம். அலக்ஷ்மி என்கிற மூதேவிக்கும், மண்ணாளும் ஸ்ரீதேவிக்கும், துர்க்கைக்கும் வணக்கம். (அலக்ஷ்மியை வேண்டுவது விலகிச்செல்வதற்காக.) )

4. துர்காயை துர்கபாராயை ஸாராயை ஸர்வ காரிண்யை:|
க்யாத்யை ததைவ கிருஷ்ணாயை தும்ராயை ஸததம் நம:||

(தடையாக வரும் இன்னல்களைத் தாண்ட உதவும் துர்கைக்கும் எல்லா உயர்வுகளையும் அடையக் காரணமாய் இருப்பவளுக்கும், எல்லாச் செயல்களையும் செய்பவளுக்கும், அனைத்திலும் அறிவாய் வியாபித்து இருப்பவளுக்கும், கருவண்ணம் உடையவளுக்கும், புகை வண்ணத்தினளாய் இருப்பவளுக்கும் வணக்கம்.)

5. அதி ஸௌம்யாதி ரௌத்ராய நதாஸ் தஸ்யை நமோ நம:|
நமோ ஜகத் ப்ரதிஷ்டாயை தேவ்யை க்ருத்யை நமோ நம:||

(மிகவும் அழகானவளாகவும், கொடியோர்க்கு மிகவும் கோரமான உருவிலும் காட்சி அளிப்பவளுக்கு வணக்கம். உலகை நிலையாக நிறுத்தியவளுக்கும் செயல் திறனாய் வியாபித்து இருப்பவளுக்கும் வணக்கம்.)

----------------------
இனி வரும் 21 ஸ்லோகங்கள் ஒவ்வொன்றையும் 3 தடவை சொல்ல வேண்டும்.
-----------------------

6. யாதேவீ ஸர்வபூதேஷூ விஷ்ணு மாயேதி ஸப்ததா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி உயிர்கள் அனைத்திலும் திருமாலின் மாயை என அழைக்கப்படுகிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

7. யாதேவீ ஸர்வபூதேஷூ சேதநேத்யபிதீயதே:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எல்லா உயிர்களிடத்திலும் உணர்வு என எந்த தேவி அழைக்கப்படுகிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

8. யாதேவீ ஸர்வபூதேஷூ புத்திரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எல்லா உயிர்களிடத்திலும் புத்தி வடிவாய் எந்த தேவி நிலைபெற்றிருக்கிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

9. யாதேவீ ஸர்வபூதேஷூ நித்ராரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி ப்ராணிகள் அனைத்திலும் நித்திரை உருவாய் அமைந்துள்ளாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

10. யாதேவீ ஸர்வபூதேஷூ க்ஷீதாரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா ஜீவன்களிலும் பசி என்ற உணர்வாய் இருக்கிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)


11. யாதேவீ ஸர்வபூதேஷூ சாயாரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா உயிரினங்களின் நிழலாகவும் நிலை பெற்றிருக்கிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

12. யாதேவீ ஸர்வபூதேஷூ சக்திரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எவள் உயிர்கள் அனைத்திலும் ஆற்றல் உருவாய் நிலை பெற்றிருக்கிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

13. யாதேவீ ஸர்வபூதேஷூ த்ருஷ்ணாரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி ப்ராணிகள் அனைத்திலும் வேட்கை உருவாய் அமைந்துள்ளாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

14. யாதேவீ ஸர்வபூதேஷூ க்ஷாந்திரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி உயிர்கள் அனைத்திலும் பொறுமையின் உருவாய் நிற்கிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

15. யாதேவீ ஸர்வபூதேஷூ ஜாதிரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா உயிர்களிலும் ஜாதி உருவாய் நிற்கிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

16. யாதேவீ ஸர்வபூதேஷூ லஜ்ஜாரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா உயிர்களிலும் ஞானம் என்கின்ற உருவாய் நிற்கிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

17. யாதேவீ ஸர்வபூதேஷூ ஸாந்திரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா உயிர்களிலும் சாந்தி வடிவினளாய் இருக்கின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

18. யாதேவீ ஸர்வபூதேஷூ ஸ்ரத்தாரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா உயிர்களிலும் அக்கறை உருவத்தில் நிலைபெற்று இருக்கின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

19. யாதேவீ ஸர்வபூதேஷூ காந்திரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா உயிர்களிலும் விளங்கும் ஒளிப்பிழம்பாய் நிற்கின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)



20.யாதேவீ ஸர்வபூதேஷூ லக்ஷ்மிரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா உயிர்களிலும் மங்கள வடிவாய் அமைந்துள்ளாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

21. யாதேவீ ஸர்வபூதேஷூ வ்ருத்திரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா உயிர்களிலும் செயல் வடிவாய் நிற்கின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

22. யாதேவீ ஸர்வபூதேஷூ ஸம்ருதிரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா உயிர்களிலும் நினைவு உருவாய் நிற்கின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

23. யாதேவீ ஸர்வபூதேஷூ தயாரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா உயிர்களிலும் இரக்கம் என்கின்ற ஊற்றாய் இருகின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

24. யாதேவீ ஸர்வபூதேஷூ துஷ்டிரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா உயிர்களிலும் திருப்தி என்கின்ற உருவாய் இருகின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

25. யாதேவீ ஸர்வபூதேஷூ மாத்ரூரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா உயிர்களிலும் அன்னை உருவாய் இருகின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

26. யாதேவீ ஸர்வபூதேஷூ ப்ராந்திரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா உயிர்களிலும் மருள் உருக்கொண்டு இருகின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

27. இந்த்ரியாணா மதிஷ்டாத்ரி பூதானாம் சாகிலே ஷூயா:|
பூதேஷூ ஸததம் தஸ்யை வ்யாப்த்யை தேவ்யை நமோ நம:||

(இந்த்ரியங்களுக்கும் தலைமையில் நின்று எவள் உயிரினங்கள் அனைத்திலும் ஊடுருவி எப்பொழுதும் எங்கும் எல்லாமுமான சக்தியாய் நிற்கின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

28. சிதி ரூபேண யா க்ருத்ஸ்னம் ஏதத்வ்யாப்ய ஸ்திதா ஜகத்:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||
(உணர்வு உருவாய் நின்று எவள் அகிலம் முழுவதும் வியாபித்து நிற்கின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

பலச்சுருதி (பலன்கள்)
-----------------------------
29. ஸ்துதா ஸூரை: பூர்வ மபீஷ்ட ஸம்ஸச்சாத் ததா ஸூரந்த்ரேண தினேஷூ ஸேவிதா :|
கரோது ஸா ந: ஸூபஹேதுரீஸ்வரி ஸூபானி பத்ராண்ய பிஹந்து சாபத:||

(முன்பு மனோரதம் ஈடேற தேவர்களால் துதிக்கப்பட்டு, பின்னர் அவ்வாறே வானவர் வேந்தனால் தினந்தோறும் தொழப்பட்ட அந்த இறைவிதான், நன்மைகள் அபைத்துக்கும் காரணமானவள். அவள் நமக்கு சுபங்களையும், மங்களங்களையும், ஏற்படுத்தட்டும். ஆபத்துக்களை அழிக்கட்டும்.)

30. யா ஸாம்ப்ரதம் ஸோத்தத தைத்ய தாபிதை: அஸ்மாபிபிரீஸா ச ஸூரைர் நமஸ்யதே:|
யா ச ஸ்ம்ருதா தத்க்ஷணவே மேவ ஹந்திந: ஸர்வாபதோ பக்தி விநம்ர மூர்த்திபி:||

(வீறுகொண்ட அசுரர்களால் அல்லல் பட்ட தேவர்கூட்டம் இறைவியைப் பணிந்தது. பணிந்தவரைக் காத்திட்டாள் தேவி. நாமும் ஆபத்துக் காலங்களில் பக்தியால் நெக்குருகி பணிந்து இறைவியை நினைத்தால், அக்கணமே அவள் நம் ஆபத்துக்களையெல்லாம் தொலைத்து நம்மைக் காப்பாள்.)

------
(தேவி மஹாத்மியம், ஐந்தாவது அத்தியாயம் அத உத்தம சரித்திரம். இது மார்க்கண்ட முனிவரால் உலகிற்கு அளிக்கப்பட்டது. விஷ்ணு மாயையான மகாலஷ்மியை தேவர்கள் துதித்த அற்புதத் துதி இதுவாகும்.)
------

16 comments:

  1. வணக்கம் ஜீவா....மிக எளிமையாகச் சொல்லியிருக்கீங்க....அருமை.

    ReplyDelete
  2. வாங்க மௌலி சார்!
    பொருளினை எடுத்து எழுதியிருக்கிறேன் அவ்வளவே. வருகைக்கு நன்றிகள்!

    ReplyDelete
  3. ஜீவா எழுத்துக்களை சரியாக உச்சரிக்க 234 என்று போட்டு எழுதினால் நன்றாக இருக்கும்.
    நல்ல பதிவு.

    ReplyDelete
  4. வாங்க திவாய்யா, ஆமாம் உச்சரிக்க எளிதாக இருந்திருக்கும்!

    ReplyDelete
  5. மார்க்கண்டேய மகரிஷி அருளிச் செய்த தோத்திரத்தின் தமிழ் வடிவம் எளிமையா வந்திருக்கு ஜீவா!

    சில ஐயங்கள்:
    1. மாயை என்பது ஞானத்தை மறைக்கச் செய்வது அல்லவா? இறைவியோ, இறைவனைக் காட்டிக் கொடுப்பவள்! அப்படி இருக்க விஷ்ணு "மாயை" என்ற பெயர் எப்படி வருகிறது?

    2. //யாதேவீ ஸர்வபூதேஷூ லஜ்ஜாரூபேண ஸம்ஸ்திதா:|
    (எந்த தேவி எல்லா உயிர்களிலும் ஞானம் என்கின்ற உருவாய் நிற்கிறாளோ//

    லஜ்ஜா ரூபேண என்றால் ஞான ரூபமா?

    ReplyDelete
  6. வாங்க கே.ஆர்.எஸ்,
    கேள்விகளுக்கு வந்தனத்தோடு நன்றிகள்!
    1. மாயைக்கு மூன்று குணங்களால் மூன்று இயல்புகளாம்.
    தமோ குணத்தினால் மறைத்திடும் சக்தியாம்.
    ரஜோ குணத்தினால் தன்னை முன்னிறுத்தும் சக்தியாம்.
    சத்வ குணத்தால் மறைத்ததை வெளிப்படுத்தும் சக்தியாம்.

    இப்போ சொல்லுங்க, சத்வ குணம் நிறைய -
    மறைந்ததெல்லாம் காண்போமன்றொ?
    காண்பவெல்லாம் (மாயையினால்) மறையுமென்றால்
    மறைந்ததெல்லாம் (மாயையினால்) காண்பமன்றோ?

    ReplyDelete
  7. 2. லஜ்ஜை என்றால் வெட்கம், நாணம் என்ற பொருள் பொதுவாக சொன்னாலும் - இந்த இடத்தில் அதன் எதிர்மறைப்பொருள் சரிவராது எனவே தோன்றுகிறது. அடக்கம், அதன் மூலமான விநயம், அதன் மூலமான ஞானம் என்பவை நான் புரிந்து கொண்டவை.

    ReplyDelete
  8. //காண்பவெல்லாம் (மாயையினால்) மறையுமென்றால்
    மறைந்ததெல்லாம் (மாயையினால்) காண்பமன்றோ?//

    :)
    மாயையின் சத்வ குணத்தால் காண்போம் தான்!

    ஆனால் அடியேன் ஐயம் என்னன்னா, மாயையின் சத்வ குணத்தால் மட்டுமே காணும் போது,
    மாயையின் மற்ற இரு குணங்களான - ரஜோ & தமோ - இவையும் சேர்த்து அல்லவா இறைவியைக் குறிக்கிறது?

    அப்படியென்றால் இறைவி இவ்விரு குணங்களால் இறைவனை மறைக்கவும் செய்வாள் என்று ஆகி விடுமே?

    அல்லது மாயையில் சத்வம் மட்டுமே இறைவியா? பிற இரண்டும் குறிக்காதா?

    முடிந்தால் விளக்கம் தாருங்களேன்! இன்றே இல்லை-ன்னா கூட, வேறு எப்போதாச்சும், வேறொரு பதிவில் கூடத் தந்தாலும் பரவாயில்லை!

    ReplyDelete
  9. விஷ்ணு மாயா ஸ்தோத்ரத்தைப் பொருளுடன் சொன்னதற்கு மிக்க நன்றி ஜீவா. சின்ன வயதில் சொன்ன நினைவு இருக்கிறது. ஆனால் அப்போது பொருள் தெரியாமல் சொன்னேன்.

    விஷ்ணு மாயை என்பது துர்கா தேவியைத் தானே குறிக்கும்? மகாலக்ஷ்மி என்று சொல்லியிருக்கிறீர்கள்?

    ReplyDelete
  10. வாங்க குமரன்,
    இறைவனின் சக்தியான இறைவி என்கிற பொருளில் - விஷ்ணுவின் சக்தியாகிய இலக்குமித் தாயார் - என்கிற பொருளில் சொல்லப்பட்டுள்ளது.

    ReplyDelete
  11. KRS,
    //அல்லது மாயையில் சத்வம் மட்டுமே இறைவியா? பிற இரண்டும் குறிக்காதா?//
    அருமையான கேள்வி கேட்டீங்க கே.ஆர்.எஸ்!
    அடியேனின் சிற்றறிவுக்கு எட்டியவரை:

    மூன்று குணங்களையும் சேர்த்துதான் இறைவி;
    சொல்லப்போனால் இறைவனும், இறைவியும் தனித்தனியே பிரித்திட இயலாதவை. அரங்கன் மார்பை விட்டு தாயார் பிரியாதது போல.

    இருப்பினும் பரமன் செயலற்றவன், தூய சத்வ குணமே கொண்டவன் - என்பதனால் - அவனது செயலை - சக்தி எனவும் - அவளாலேயே - அண்ட சராசரங்களும் அத்தனை உயிர்களும் ஜனித்ததென்கிறோம். இவையெல்லாம் விளைவதற்கு மற்ற மூன்று குணங்களின் கூட்டும் தேவைப்படுகிறதே. சாத்வ குணத்தின் கூட்டோடுதான் பூக்களெல்லாம் பூத்து உலகில் நறுமணம் வீசுகின்றன! மூன்று குணங்களில் கலவை ஜீவனில் செய்து வைத்தது அதன் ஜீன்களை ப்ரோக்ராம் செய்தது!

    கயிற்றை பாம்பென தவறாக எண்ணி பயம் கொள்ளும் அறியாமை கயிற்றினால் *முழுவதும்* இல்லையே! கயிற்றின் நீளமும், கயிற்றின் விட்டமும், இது கயிறுதான், பாம்பல்ல என உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறது - இதுதான் மறைத்ததை வெளிப்படுத்தும் சக்தி. மொத்தத்தில் மாயை என்பது தவறான பழிக்கக் கூடியது அல்ல. ஆனால் ஜீவனில் அதனால் விளையும் அவித்தையானது, அவன் அறியாமைத் திரையை அகலப்படுத்துகிறது.

    பரமனின் விளையாட்டில் விளைந்த விந்தையினால் ஜீவாத்மாக்கள், மீண்டும் பரமனை அடைய, சத்வ குணம் நிறைந்திட வேண்டும். அதற்கு நமது ஜெனடிக் புரோக்ராமிங்கை சத்வ குணத்திற்கு சாதகம் செய்து மாற்றி அமைக்க வேணும்!

    ReplyDelete
  12. // இருப்பினும் பரமன் செயலற்றவன்,/// ?? !!!!

    பரமனே எல்லாமே. எல்லாமே அவனுள் அடங்கும் என்றபின், பரமனை செயலற்றவன் எனச் சொல்வது இயலுமோ ?

    இன்னொரு கோணத்தில், பரமனே எல்லாம் என்ற பொழுது, சக்தியும் அவனுள் தானே .

    மாயா ரஹிதமாக உணரப்படும் நிலையில் அவன் பிரும்மன். பரமன்.
    மாயா ஸஹிதமாக உணரப்படும் நிலையின் அவன் ஈஸ்வரன்.

    ஈஸ்வரன் என வர்ணித்து உணரப்படும் நிலையில் சக்தி அவனுள் இருந்து, பிறந்து, பிரிந்து, தன் செயலாக்கத்தைத்
    துவங்கும் நிலையில் தானே , மாயை வெளிக்கிளம்புகிறது.

    மாயை எனச் சொல்லும்போதே அதன் நிலையாமை காண்க. இல்லாத ஒன்றை இருப்பதாக நினைக்கும் பிரமை.
    அது மட்டுமல்ல, ஒன்றாக இருந்த ஒன்று, மற்றொன்றாக உணரப்படும் நிலை. இந்த மாயையின் காரணமாகத்தான்,
    கார்ய பூதமான லோகம் இயங்குகிறது எனவும் சொல்ல இயலும்.

    இப்பொழுது நீங்கள் சொல்லும் வாக்கியத்தைக் கவனித்தால்,

    //1. மாயைக்கு மூன்று குணங்களால் மூன்று இயல்புகளாம்.
    தமோ குணத்தினால் மறைத்திடும் சக்தியாம்.
    ரஜோ குணத்தினால் தன்னை முன்னிறுத்தும் சக்தியாம்.
    சத்வ குணத்தால் மறைத்ததை வெளிப்படுத்தும் சக்தியாம்.//

    எத்தனை தெளிவாக இருக்கிறது, பாருங்கள் !!

    அது சரி. ஒரு ஜென்ரேடர் இருக்கிறது. அதில் சக்தி உண்டாக்கும் திறன் இருக்கிறதா இல்லையா ?
    ஆனால், பாருங்கள் ! அந்த ஜெனரேடருக்கும் ஒரு ஸ்விட்ச் இருக்கிறது.
    ஸ்விட்ச் போட்டு அந்த ஜெனரேடர் இயங்கும்போது, சக்தி பிறக்கிறது.
    அந்த ஸ்விட்சைப்போடுவது யார் ?
    ஜெனரேடரைப் பண்ணினவன், இந்த ஸ்விட்சைப்பண்ணாவிடின் .....?

    அதிகம் பேசிவிட்டேனோ ??

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  13. அருமையான விளக்கம் சுப்புரத்தினம் ஐயா, மிக்க நன்றிகள்!

    ReplyDelete
  14. http://www.youtube.com/watch?v=t7goiF0e4qM

    1975ம் வருடம் முதல் தடவையாக மும்பை ( அப்பொழுது அது பாம்பே ) மஹாலக்ஷ்மி கோவிலில் இந்த
    விஷ்ணு மாயா ஸ்தோத்திரத்தை ஒரு பக்தர் மனமுருகப் பாடிக்கொண்டிருந்ததை ரசித்து நானும்
    அதை ஒரு ராக மாலிகாவாக ( ஏழு அல்லது எட்டு ராகங்களில் ) பாடியது நினைவு இருக்கிறது.

    திரும்பவும் அதே போல் பாடமுடியுமா என பார்த்தேன்.

    முடியவில்லை.

    இருப்பினும் ஸ்லோகமாயிற்றே என்று பாடியிருக்கிறேன்.
    கேட்கவும்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  15. ஆகா, அருமை, மிக்க நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  16. vijayalakshmi7:31 AM

    wonderful.from ur blog only i came to know this slogam.

    ReplyDelete