Sunday, April 15, 2007

சுஃபி கவி ரூமியும் பட்டாணியும்...


சுஃபி கவியான ஜலாலதின் முகமது ரூமி (1207 - 1273) யின் கவிதை ஆக்கத்திலிருந்து ஒரு சில வரிகள்:

பானையில் கொதித்திடும் இந்த பட்டாணியைப் பாருங்களேன்...
பானையை சூடாக்கும் தீயினால், மேலெழும்பி வருவதைப் பாருங்களேன்...
மேலெழுந்த பட்டாணி அழுதபடி கேட்கிறது:
"என்னை ஏன் இப்படி தீயினால் வாட்டுகிறாய்?"
அங்கு சமையல் செய்யும் பெண்ணோ, தன் கையில் இருக்கும் கரண்டியினால்
மேலெழுந்த பட்டாணியை மீண்டும் நீரில் அமிழ்த்தி சொல்கிறாள்:
"நன்றாக வேக வேண்டும் தெரிகிறதா, வேளியே வேளியே வாராதே.
நான் உன்னை வேக வைப்பது உன் மேலான வெறுப்பினால் அல்ல.
இப்போது நீ பக்குவப்படுகிறாய்.
உன்னுள் இருக்கும் சத்துக்கள் உலகின் சக்தியில் கலக்கின்றன.
நீ தோட்டத்தில் வளரும்பொழுது தண்ணீர் குடித்தாய்,
அந்த தண்ணீர், இந்த தீயிற்காக.
அந்த தோட்டத்திலேயே வாடி வீழாமல்
பட்டாணியாய் பறிக்கப்பட்டு
ஒருவர் உணவில் சக்தியாய் கலக்கப் போகிறாய்.
ஆகவே, பட்டாணியே, நன்றாக சமைந்திடு."

6 comments:

  1. இதுதான் உண்மை ஜீவா.
    இப்போதுதான் இந்தப் பதிவைப் பார்த்தேன்.

    நல்ல கருத்தைப் பதிவிட்டதற்கு நன்றி.

    ReplyDelete
  2. வாங்க வல்லி சிம்ஹன்!
    தங்கள் மறுமொழிக்கு நன்றி!

    ReplyDelete
  3. nalla karuthu. romba nalukku appuram varen Kumaran pathivile irunthu thedi pidichu vara vendiyatha poyiduchu. nalla pakirvukku nanri.

    ReplyDelete
  4. வாங்க கீதா மேடம்!

    ReplyDelete
  5. அருமையான கவிதை. பகிர்தலுக்கு நன்றி. மொழி மாற்றம் நன்று.

    ReplyDelete
  6. வாங்க திரு.ரமேஷ்! நன்றிகள்!

    ReplyDelete