Friday, July 01, 2005

சென்னையில் கண்டதும் கேட்டதும்

தாயகம் சென்று திரும்பியாயிற்று. பயணம் இனிதாகவும் பயனாகவும் இருந்தது. உடன் ஒரு மகிழ்சியான செய்தி. எனக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. இல்லறம் நல்லறமாய், அன்பும் அறனும் நிறைந்ததாய் நிறைவேற தங்கள் வாழ்த்துக்களை பகிர்வீர்.

இரண்டே வாரமானதலால், சென்னையை விட்டு வேறூர் ஏதும் செல்லவில்லை. சென்னையில் முதல் வாரம் வெயில் தகித்தது. இரண்டாவது வாரமோ பெரிதும் மேகமூட்டமாய் இருக்க வெயிலின்்லின் கடுமை சற்றே தணிந்து இருந்தது. இன்னமும் குடிநீரை காசு கொடுத்து வாங்கிக் கொண்டு இருக்கிறோம்.

சென்னையில் நாங்கள் வசிக்கும் அசோக் நகரில் காலையில் வாக்கிங் செல்வதற்காக நிறையபேர் அதிகாலையிலேயே எழுந்து தெருக்களில் வலம் வருவது ஆரோக்கியமான செய்தி. முதியவர்களும், பெண்களும், இளைஞர்களும் யாதொரு பாகுபாடில்லாமல் குடும்ப சகிதமாக நடந்து செல்வது இனிது. கூடவே அருகம்புல் சாறும், கீரையும் வாங்கக் கிடைக்கிறது.

சென்னையில் புதிதாக 'டெக்கான் க்ரானிகல்' என்ற தினசரி நாளிதழ் தனது சென்னைப் பதிப்பை துவக்கியிருக்கிறது. ஒரே ஒரு ரூபாய்க்கு கிடைப்பதால் பல வீடுகளில் இந்த நாளிதழுக்கு மாறி விட்டார்கள். 'டி.நகர் டாக்ஸ்', 'மாம்பலம் டைம்ஸ்' போன்ற இலவச உள்ளுர் குறும் இதழ்களும் பிரபலமாகியுள்ளன - தரமான கட்டுரைகளுடன் - ஒன்றே ஒன்று என்று இருந்தாலும்.

வீட்டில் 'லெண்டிங்' முறையில் அனைத்து பத்ரிக்கைகளும் வந்து போனாலும் அவற்றை படிக்க யாதொரு உற்சாகமும் இருக்கவில்லை. சில பத்ரிக்கைகளில், சில கட்டுரைகள் சம்பந்தப்பட்ட நபர்களால் பணம் கொடுத்து எழுதப்பட்டதாக தெரிந்தது. உதாரணத்திற்கு, நடிகை நமீதா பற்றிய கட்டுரை, ஒன்றுக்கும் மேற்பட்ட வார இதழில் ஒரே சமயத்தில்்!. மேலும் ஒவ்வொரு வார இதழிலும் ஒரு நடிகர் தன் சுய புராணத்தை அவிழ்த்து விட்டுக்கொண்டு இருக்கிறார். மார்க்கெட் இழந்த நடிகர்களுக்குத்தான் வேலை இல்லை என்றால், படிப்பவர்களுக்கு கூடவா?. எப்படி, தொலைக்காட்சி நிகழ்சிகள் முக்கால்வாசி சினிமா சம்பந்தப்பட்டதாக மாறிவிட்டதோ, அதுபோல பத்ரிக்கைகளும் மாறிக்கொண்டு இருக்கின்றன. கல்கி வார இதழின் தாள்தரமும் கணிசமாக குறைந்து இருந்தது. இன்னமும் ஜூ.வி, நக்கீரன் போன்ற இதழ்கள் பரபரப்பான செய்திகளை பதிப்பதிலும், தேவைப்பட்டால் அவற்றை தயாரிப்பதிலும் முனைப்பாய் இருக்கின்றன.

சுடோகு என்ற ஜப்பானிய எண்வரிசை விளையாட்டு சென்னையில் பிரபலமாகி உள்ளது. இளைஞர்கள் காலையில் பேப்பரும் பென்சிலும் கொண்டு அழித்து அழித்து கட்டங்களை நிரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்!. அதுபோல குழந்தைகளிடம் 'போகோ' என்கிற கார்ட்டூன் சேனல் பிரபலமாகி உள்ளது.

நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க் புத்தக கடைக்கு சென்றிருந்தேன். வெளிநாட்டு பதிப்பக புத்தகங்கள் (உதாரணம் பெங்குவின் க்ளாசிக்ஸ்) வெளிநாடு விலையில் பாதி விலையில் கிடைக்கிறது! உதாரணத்திற்கு ஒரு 5$ புத்தகம் ருபாய் விலையில் 110. சி.டி க்களின் விலைகளில் சீரற்ற தன்மை உள்ளது. 65 ரூபாய் தொடங்கி 250 ரூபாய் வரை செல்கிறது. தேவைக்கேற்ப விலை நிர்ணயம் செய்து கொள்வார்கள் போலும். ஆனால் ஒன்று - 65 ரூபாய்க்கே ஒரிஜினல் சி.டி கிடைத்தால், சி.டி. திருட்டுக்கள் குறையும். இப்போதெல்லாம் யாரும் ஒலி நாடா கேசட்டுக்களை வாங்குவதில்லை என நினைக்கிறேன். இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி சி.டி. க்கள் நீண்ட காத்திருப்புக்குப்பின் வெளி வந்துவிட்டன.

சென்னையில் கிழக்கு கடற்கரைச்சாலை எவ்வளவு நன்றாக உள்ளது என்று போய்பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது - தினசரி நாளிதழ்களில் கொலை, கொள்ளை சம்பவங்களைப் படிக்கும் வரை. இரவு ஒன்பது மணிக்குமேல் இந்தச் சாலையில் கொலை, கொள்ளை மலிவோ மலிவாம்.

சென்னையில் இப்போதெல்லாம் தரமான வெளிநாட்டு உணவகங்களும் பிரபலமாகியுள்ளன. சீன, தாய் உணவகங்கள் சென்னையிலும் இருப்பது வியப்பைத் தருகிறது. மௌபரீஸ் சாலையில் 'பெண்ஜராங்' என்ற தாய் உணவகம் இதிலொன்று.

அமெரிக்க ஆப்பிள் வகைகள் கூட சாதாரண பழக்கடைகளில் கிடைக்கிறது - 'Produce of U.S.A' என்ற ஸ்டிக்கருடன். (எந்த அளவுக்கு உண்மையான ஸ்டிக்கர் என்பது வேறு் விஷயம்)

டி.கே பட்டம்மாள் அவர்களின் நினைவாக சிறப்பு கர்நாடக இசைக் கச்சேரி வாணி மாஹாலில் நடந்தது, சென்றிருந்தேன். டி.எம். கிருஷ்ணா வாய்ப்பாட்டு. ஸ்ரீராம்குமார் வயலின். கணேஷ்ராம் ம்ருதங்கம். கார்த்திக் கடம். டி.கே பட்டம்மாள் அவர்கள் இசை அமைத்த அரிய பாடல்களும் கேட்கக் கிடைத்தது.

27 comments:

  1. வாழ்த்துகள் ஜீவா. இனிய இல்லறத்துக்கு, மணவாழ்க்கைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
    சென்னை விஜயத்தில் நிறைய விஷயங்கள் யூகமாக கவனித்திருக்கிறீர்கள்.
    3 வருடங்கள் கழித்து மீண்டும் சென்னை செல்லவிருப்பதால், இந்த விஷயங்கள்
    உபயோகப்படும்.

    என்றென்றும் அன்புடன்,
    சீமாச்சு...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் ஜீவா. சென்னை குறித்தும் நன்றாகப் பதிவு செய்துள்ளீர்கள்.
    ராம்கி (http://stationbench.blogspot.com)

    ReplyDelete
  3. Anonymous11:30 PM

    ஜீவா! மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!. சென்னையில் எனக்கு மிகவும் பிடித்த இடம் அசோக் நகர். இரண்டு வாரம்., இரட்டிப்பு மகிழ்ச்சி சரிதானே?.,

    ReplyDelete
  4. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜீவா!!!

    //இரண்டாவது வாரமோ பெரிதும் மேகமூட்டமாய் இருக்க வெயிலின்
    கடுமை சற்றே தணிந்து இருந்தது//

    இது நிச்சதார்த்தம் முடிஞ்ச பின்னே வந்த வாரமா? :-)

    பத்திரிக்கைக்களைப் பத்தி நீங்க குறிப்பிட்டு இருக்கறது 100% உண்மை. எங்கும், எதிலும்
    சினிமான்னே ஆகியிருக்கு!!

    சீமாச்சு,

    உங்களுக்கு இங்கேயே ஒரு விஷயம் சொல்லிடறேன். நேத்துதான் நம்ம டோண்டு
    பதிவைப் பார்த்துட்டு, 'இந்தளூர்' ன்னதும் 'சட்'ன்னு உங்க ஞாபகம் வந்தது!

    எல்லோரும் நல்லா இருங்க!!!!

    என்றும் அன்புடன்,
    துளசி.

    ReplyDelete
  5. அன்பின் துளசியக்கா,
    நேத்து சாப்பிடும்போது புரையேறியபோதே நெனச்சேன்.. யாரோ நெனக்கறாங்க போலருக்கேன்னு.. நீங்கதானென்று இப்பதான் தெரிஞ்சுது.
    டோண்டு சார் மாயவரம் பத்தி எழுதியதைப் படிக்க சந்தோசமாக இருந்த்து.. ஆனா, மாயவரம் போனது ஒரிஜினல் டோண்டுவா.. இல்லை
    போலி டோண்டுவா...ன்னு தெரியலை.. அவர் தான் இப்ப டபுள் ஆக்ட் கொடுக்கறாரே... எலிக்குட்டி வெச்சுப் பாத்தாத்தான் தெரியுது...

    என்றென்றும் அன்புடன்,
    சீமாச்சு..

    ReplyDelete
  6. இனிய இல்லறத்துக்கு, மணவாழ்க்கைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்....

    ReplyDelete
  7. நெனைச்சேன். நான் அப்பவே நெனைச்சேன். நீங்க ஊருக்கு போகும் போதே நெனைச்சேன். இப்படி வம்புல மாட்டிக்கிட்டு வந்துருக்கிறீங்களே :-)

    சும்மா ஒரு ஜாலிக்கு சொன்னேன் ஜீவா. இனிய இல்லறமும் மணவாழ்க்கையும் உங்கள் இருவர் வாழ்க்கையிலும் தேன் போல இனிக்கட்டும். வாழ்த்துக்கள் ஜீவா.

    ReplyDelete
  8. மனம் நிறைந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. ஜீவா, வாழ்த்துக்கள்
    அருள்

    ReplyDelete
  10. அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    விட்டுப்போன ஒரு விஷயம்:
    கச்சேரி முடிந்து என்கேயாவது சாப்பிடலாம் என்று G.N.செட்டி தெருவில் நடக்கும் பொழுது (வருங்காலத் துணைவியுடன் தான்) கண்ணில் பட்டது முருகன் இட்லி கடை. வெளியில் ஒரே கூட்டம். முன்னதாகவே பெயர் கொடுத்து காத்திருந்து விட்டுத்தான் உள்ளே நுழைந்தோம். சுவையாக இருந்தது உணவு. பின்னால்தான் தெரிந்தது - பிரபலமாகிக் கொண்டு இருக்கும் கடை இதுவென்று.

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. Hello Jeeva,

    Congratulations on your marriage! The compilation of your experiences at Chennai was good! I think I would have "identified" myself more with it, had I been an NRI too. :-)

    Will read the 'vittuppona padhivigal' soon.

    Thanks for visiting my blog and leaving an appreciating note!

    ~ Kay Yes.

    PS: I am not able to type in Thamizh in the comments section! When I use the eKalappai 2.0 software with the Unicode font, I get some garbled characters. Any idea why? If you know, please let me know at carnivas@gmail.com. Thank you!

    ReplyDelete
  13. மனமார்ந்த வாழ்த்துகள் ஜீவா!

    ReplyDelete
  14. பதின்னாறும் பெற்று பெருவாழ்வு வழ வாழ்த்துகள்!!!!!!!!

    ReplyDelete
  15. Anonymous6:51 PM

    வாழ்த்துகள் :-)
    -பாலாஜி
    பாஸ்டன்

    ReplyDelete
  16. வாழ்த்துகள் ஜீவா. இனிமே டெலிபோன் பில் வேற எகிறுமே !!!
    -டண்டணக்கா

    ReplyDelete
  17. மணவாழ்க்கை இனிமையாக அமைய எனது வாழ்த்துகள்!

    டெக்கான் க்ரானிகல் பத்திரிகையின் தரம் எப்படி இருக்கிறது? பார்த்தீர்களா?
    1 ரூபாய்க்கு எப்படி கட்டுபடியாகிறது?

    எம்.கே.

    ReplyDelete
  18. மணவாழ்க்கை இனிமையாக அமைய எனது வாழ்த்துகள்!

    டெக்கான் க்ரானிகல் பத்திரிகையின் தரம் எப்படி இருக்கிறது? பார்த்தீர்களா?
    1 ரூபாய்க்கு எப்படி கட்டுபடியாகிறது?

    எம்.கே.

    ReplyDelete
  19. அனைவரின் வாழ்த்துக்களுக்கம் மீண்டும் நன்றி.

    எம்.கே.குமார், டெக்கான் க்ரானிகல் நன்றாகத்தான் இருந்தது. மும்பையின் Asian Age நாளிதழைப்போல செய்திக்கோர்வைகள் உள்ளன.

    ReplyDelete
  20. மூர்த்தி,
    உங்கள் பெயரில் போலி பின்னூட்டம் என் பதிவில் விட்டிருக்கிறார் ஒரு போலி.
    அது தாங்களல்ல எனக்குத் தெரியும்.
    இருப்பினும் தங்கள் கவனத்திற்கு,

    அன்புடன்,
    ஜீவா.

    ReplyDelete
  21. உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப் போகும் நீங்கள் எல்லா வளமும் பெற்று இனிதே வாழ என் வாழ்த்துக்கள்.

    நான் கூட சமீபத்தில் சென்னைக்குப் போயிருந்தேன். ஆனால் உங்களைப் போல் என்னால் எழுத முடியவில்லை. அதற்கும் வாழ்த்துக்கள். ஆமாம் நீங்கள் வசிப்பது அசோக் நகரில்லா? என்னுடைய வீடு கோடம்பாக்கத்தில், சாமியார் மடத்திற்குப் பக்கத்தில். கொஞ்சம் நெருங்கி வந்து விட்டோம்.

    ReplyDelete
  22. நன்றி வெங்கி. செப்டம்பரில் சென்னை வருவதாக இருந்தால் அவசியம் திருமணத்திற்கு வர வேண்டும். (இந்த அழைப்பு சக வலைப்பதிவர் / வாசகர் அனைவருக்கும்)
    செப்பு மொழிகள் நன்றாக வந்து கொண்டு இருக்கின்றன, தொடரவும்.

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  24. தங்களது சென்னை விவரிப்பு அருமை. இல்லறத்தில் காலடி எடுத்து வைக்கும் உங்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  25. Naanum Ippozhuthu thaan chennai sendru thirumbinen.

    Thangal mana vaazhvu inithaai amaiya vaazhthukkal.

    enakkellam nichayathartham mudinthavudan pennai en kooda veliyil anuppave illai :(

    enathu nichayathartham thirumanathirku muthal naal :D

    Enjoy

    ReplyDelete
  26. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  27. நன்றி சதீஷ்். தங்கள் மணவாழ்வு இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete