நல்லூரானை நாவில் ஏத்திட
நமக்கெலாம் நற்கதி காட்டிட
நற்சிந்தனை பாடும் கிளிப்பாட்டைக்
கேட்கலையோ யோகநாதர் பாடிவைத்தாரடி:
நல்லூரான் திருவடி
நல்லூரான் திருவடியை
நான்நினைத்த மாத்திரத்தில்
எல்லாம் மறப்பேனடி கிளியே
இரவுபகல் காணேனடி!
ஆன்மா அழியாதென்று
அன்றெனக்குச் சொன்னமொழி
நான்மறந்து போவேனோடி கிளியே
நல்லூரான் தஞ்சமடி!
தேவர் சிறைமீட்ட
செல்வன் திருவடிகள்
காவல் எனக்காமடி கிளியே
கவலையெல்லாம் போகுதடி!
எத்தொழிலைச் செய்தாலென்
எத்தவத்தைப் பட்டாலென்
கர்த்தன் திருவடிகள் கிளியே
காவல் அறிந்திடடி!
பஞ்சம்படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவோமோ நாங்களடி கிளியே
ஆறுமுகன் தஞ்சமடி!
சுவாமி யோகநாதன்
சொன்ன திருப்பாட்டைந்தும்
பூமியிற் சொன்னாலடி கிளியே
பொல்லாங்கு தீருமடி!
Showing posts with label நற்சிந்தனை. Show all posts
Showing posts with label நற்சிந்தனை. Show all posts
Monday, May 16, 2011
Friday, May 30, 2008
நற்சிந்தனை: ஆன்மீக அரிச்சுவடி
யாழ்பாணத்து சுவாமிகளும், நந்திநாத சம்பிரதாயத்தின் கைலாச பரம்பரையின் 161ஆவது குருவுமான சிவயோக சுவாமிகளின் பாடல்களான "நற்சிந்தனை" என்கிற தொகுப்புலிருந்து ஒரு பாடல்:
அன்பு சிவமென்ற ஆன்றோர் திருவாக்கை
இன்பமுடன் போற்றியிருப்பது எக்காலம்?
ஆதி அந்தமில்லாத ஆன்மாவை நாமென்ற
சேதி அறிந்து தெரிவிப்பது எக்காலம்?
இம்மையிலும் மறுமையிலும் எம்மைவிட்டு நீங்காத
செம்மலர் தாள்கண்டு சீவிப்பது எக்காலம்?
ஈசன் திருவடியை என்றும் மறவாமல்
வாச மலர்கொண்டு வணங்குவது எக்காலம்?
உருகி யுருகி உணர்விழந்து நின்று
பெருகி வருமமிழ்தைப் பருகுவது எக்காலம்?
ஊரும் பேருமல்லா ஒருவன் திருவடியை
நீரும் பூவும்போட்டு நெக்குநிற்ப தெக்காலம்?
எல்லா உயிரினும் நில்லாமல் நிற்பவனை
நினைந்து நினைத்துருகி நிற்பதுவு மெக்காலம்?
ஏக னேக னிறைவனடி வாழ்கவெனும்
மோக மறுக்குமொழி கண்டுய்வ தெக்காலம்?
ஐந்து புலன்வென்ற ஆன்றோர் திருவடிகீழ்
நைந்துருகி நின்று பெறுவதெக்காலம்?
ஒன்றென் றிருதெய்வம் உண்டென் றிருவென்று
அன்றுசொன்ன பட்டினத்தா ரடிபணிவ தெக்காலம்?
ஓமெனு மெழுத்தினுள்ளே ஒளியதாய் விளங்குகின்ற
சோமசுந் தரத்தின் அடிதொழுவ தெக்காலம்?
அன்பு சிவமென்ற ஆன்றோர் திருவாக்கை
இன்பமுடன் போற்றியிருப்பது எக்காலம்?
ஆதி அந்தமில்லாத ஆன்மாவை நாமென்ற
சேதி அறிந்து தெரிவிப்பது எக்காலம்?
இம்மையிலும் மறுமையிலும் எம்மைவிட்டு நீங்காத
செம்மலர் தாள்கண்டு சீவிப்பது எக்காலம்?
ஈசன் திருவடியை என்றும் மறவாமல்
வாச மலர்கொண்டு வணங்குவது எக்காலம்?
உருகி யுருகி உணர்விழந்து நின்று
பெருகி வருமமிழ்தைப் பருகுவது எக்காலம்?
ஊரும் பேருமல்லா ஒருவன் திருவடியை
நீரும் பூவும்போட்டு நெக்குநிற்ப தெக்காலம்?
எல்லா உயிரினும் நில்லாமல் நிற்பவனை
நினைந்து நினைத்துருகி நிற்பதுவு மெக்காலம்?
ஏக னேக னிறைவனடி வாழ்கவெனும்
மோக மறுக்குமொழி கண்டுய்வ தெக்காலம்?
ஐந்து புலன்வென்ற ஆன்றோர் திருவடிகீழ்
நைந்துருகி நின்று பெறுவதெக்காலம்?
ஒன்றென் றிருதெய்வம் உண்டென் றிருவென்று
அன்றுசொன்ன பட்டினத்தா ரடிபணிவ தெக்காலம்?
ஓமெனு மெழுத்தினுள்ளே ஒளியதாய் விளங்குகின்ற
சோமசுந் தரத்தின் அடிதொழுவ தெக்காலம்?
Subscribe to:
Posts (Atom)