Showing posts with label ஜேசுதாஸ். Show all posts
Showing posts with label ஜேசுதாஸ். Show all posts

Sunday, November 10, 2013

சிலையில் இருந்து சிவரூபம்!

பல வருடங்களுக்கு முன் ஜேசுதாஸ் பாடிக் கேட்டிருந்த இந்த மலையாளப் பாடலை, இங்கே பதிவு செய்கிறேன்.

பாடலை இயற்றியவர் யாரென்று தெரியவில்லை.

சிலையே கைக்கொண்டு சிவரூபம் ஆக்குன்ன
கலையுடே கால்களே கைத்தொழுனேன்

முளையே சும்பிச்சு முரளியாய் மாட்டிய
முரஹர பத பாதம் கைத்தொழுனேன்

மூகன்னு சுவரமேழுக்கும் முக்தி பிரதாஹினியாம்
மூகாம்பிகே நின்னே கைத்தொழுனேன்

காலில் சிலங்கையோடடு ஆனந்த நடனமாடும்
கனகசபாபதியே கைத்தொழுனேன்

கல்லேலே கலைவண்ணம் கண்டு
கண்களில் சிலைவண்ணம் காண,
கண்களும் காணா சிவரூபம் காண,
கைகளும் அவன் காற் தொழுமே.

மூங்கிலை ஒடித்து குழலாக மாற்றி
முரளீகானம் இசைத்திடும்
முரஹரனாம் கண்ணனின் தாமரை
மலர் பாதங்களைக் கைத் தொழுமே.

தித்திக்கும் சுவரம் ஏழுக்கும்
முக்தி அளித்தவளாம்
மூகாம்பிகை அன்னையை என்
கைகளும் பணிந்து தொழுமே.

காலிற் சதங்கைகள் ஒலிக்க அம்பலத்தில்
ஆனந்த நடனம் ஆடும்
கனக சபாபதியை என்
கைகளும் போற்றித் தொழுமே.

Saturday, June 14, 2008

சாமியே சரணம் ஐயப்பா! : ஜேசுதாஸ் & ஒக்கேனக்கல்

இறைவனை பிரார்த்திப்பது நமது மனித இனத்திற்கே கிடைத்த பெரும் பேறு. அந்தப் பேறு கிட்டி இருப்பினும், அவனை என்ன கேட்பது? ஒரு வரம் கேட்பின், அவன் வேறெதையும் எதிர்பார்ப்போனோ? துன்பம் நேருங்கால் அதைத் துடைக்குமாறு கிடைக்கலாம். நல்ல பண்பு பெற்று நல்வாழ்வு வாழும்போது, நாதன் அருள் இருந்து, நற்செயல்களேயே செய்யும் போது, வேறெந்த துன்பமும் அண்டாதபோது வேறென்ன கேட்கலாம்? நம் அருகில் இருப்பவர்கள் நலமுடன் வாழ வேண்டலாம். ஏன் இந்த உலகமே நலமாக வாழப் பிரார்த்தனை செய்யலாம்.
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் வரிகளில்:

உலகமெலாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும்
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
கல்லாமை கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும்
நலவாழ்வை அளிக்கும் மெய் ஞான ஒளி வீசட்டும்
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!


இங்கே ஒருவர் சபரி ஐயப்பனை என்ன வரம் கேட்கிறார் பாருங்கள்:

எடுப்பு

என்ன வரம் கேட்பேன் நானே

என் மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே,

என்ன வரம் கேட்பேன் நானே?

புகழை நான் வேண்டவா, பொருளை நான் வேண்டவா,

நல்ல பண்பை நான் வேண்டவா,

இவை யாவும் கலந்த நீ ஈசன் மகனல்லவா!

என்ன வரம், வேறென்ன கேட்பேன் நானே,

மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே...!

தொடுப்பு

வானத்தில் நானிருந்தால் மேகமாக ஆகணும்

சபரிமலை மேல் தவழ்ந்து மழையாகப் பொழியணும்

கடலுக்குள் நான் பிறந்தால் முத்துக்கள் சேர்க்கணும்

முத்துக்கள் கோர்த்து வந்து ஐயனுக்கு சூட்டணும்,

மனிதனாகப் பிறந்து விட்டேன், எப்படி நான் வாழணும்?

இசை என்னும் மந்திரக்கோலால் மதங்களை நான் சேர்க்கணும்.

மதங்கள் எனும் மலைகள், ஆதி எனும் தடைகள் கடந்திட

ஐயன் உன் அருளினை நான் பெறணும்.

(என்ன வரம், வேறென்ன வரம் ...)

முடிப்பு
பறவையாக நான் பிறந்தால், கருடனாக ஆகணும்

திருவாபரணப்பெட்டி மேலே காவலுக்குப் போகணும்

மலராக நான் பிறந்தால், கமலமாகப் பூக்கணும்

ஐயன் பாதகமலம் சேர்ந்து சரணாகதி வேண்டணும்

காற்று மண்டலத்தில் எங்கும் உன் புகழைப் பாடணும்

பேரசை என்றபோதும் ஐயன் இதை நிறைவேற்றணும்:

மரணம் வரும் தருணம் வரையில் இசைப்பயணம்

தொடர்ந்திட அடியவன் நின் திருவடி சரணமே!

(என்ன வரம், வேறென்ன வரம் ...)

என்ன வரம் கேட்பேன் நானே?


சாமியே சரணம் ஐயப்பா!

இன்னொரு விஷயம்:
சென்ற ஏப்ரல் மாதத்தில், ஒக்கேனக்கல் பிரச்சனை சூடாகி, விஷமிகளின் வன்மச் செயலால் நம் மனம் புண்பட்டபோது, ஜேசுதாஸ் அவர்களுக்கு பங்களூர் ராம் சேவா மண்டலியில் கச்சேரி. கச்சேரியில் கன்னடர்களுக்கு மிகவும் விருப்பமான கிருஷ்ணா நீ பேகனே பாரோ பாடலைப் பாடி முடித்த கையோடு, அவர்களுக்கு நல்லதொரு அறிவுரையும் வழங்கினாரே பார்க்கலாம்! நீங்களே கேளுங்கள்:

ஜேசுதாஸ்-அறிவுரை

Wednesday, March 26, 2008

சேவை செய்யும் என்னை மறந்துவிடாதே! : தியாகராஜர்

சேவை செய்யும் என்னை மறந்துவிடாதே!

ஸ்ரீ தாயார் துணைவா, ஸ்ரீ தியாகராஜரால் போற்றப்பட்டவனே!

உன்னை உபசரிக்க பலர் இருப்பதால்
உன் அருள் வேண்டி
உன் புகழை பாடிக் கொண்டிருக்கும்
என்னை மறந்துவிடாதே!

உன் வாயிலிலே நிலையாக வாயு மைந்தன் உள்ளான் என்றாலும்,

உன் தம்பியர் உன்னுடன் சேர்ந்துள்ளனர் என்றாலும்,

உன் ஏகாந்தத்திற்காக ஜானகிதேவி காத்திருக்கிறார் என்றாலும்,

ஸ்ரீ தாயார் துணைவா, தியாகராஜரால் போற்றப்படுபவனே,

உன்னை உபசரிக்க இப்படியெல்லாம் பலர் இருந்தாலும் என்னை மறந்துவிடாதே!

-----------------------------------------------------------------------
இராகம்: பைரவி
தாளம்: ரூபகம்
இயற்றிவர்: தியாகராஜர்
மொழி: தெலுங்கு

பல்லவி
உபசாரமு ஜேஸேவா ருன்னாரனி மரவகுரா

அனுபல்லவி
க்ருப காவலெனனி நே நீ
கீர்தினி பல்குசுனுண்டக (உபசாரமு...)

சரணம்
வாகிடனே பதிலமுக வாதாத்மஜுடுன்னாடனி
ஸ்ரீகருலகு நீ தம்முலு சேரியுன்னாரனி
ஏகாந்தமுனனு ஜானகி யேர்படியுன்னதனி
ஸ்ரீகாந்த பருலேலனி ஸ்ரீதியாகராஜ வினுத (உபசாரமு...)

------------------------------------------------------------------
வயலினில் பைரவி ஆலாபனை:
upacharamu-violin-...


பத்மஸ்ரீ கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் செவி இனிக்கும் அமுதக் குரலில்:
upacharamu-kjj.mp3



சஞ்சய் சுப்ரமணியம் பாடிட இங்கு கேட்கலாம்.

இந்தப் பாடலின் பைரவி ஆலாபனையை நாதஸ்வர வாசிப்பில் இங்கு கேட்டு நாத மழையினில் நனையலாம்.

Sunday, July 15, 2007

குரு வந்தனம்

தூய நற்குரு துணை அருளை நாடு நெஞ்சமே!
குரு மலரடிய தேடு நெஞ்சமே!

தேடிடும் கலை அன்பொடு
தெளிவித்த என் ஈசன்
பாடும் என் நாவில் இசையாய்
படிபவர் என் குருநாதார்

பூவென யான் மலரவும்
போற்ற மணம் தந்தவர்
திரியென இருந்த மதி
தீபமாய் ஒளிர வைத்தார்
விதையென தளிராய் இருந்தேன்
விதைத்திட தளிர்த்தேன் மலர்ந்தேன்
ஆதாரம் குருவே பணிந்தேன்
அனைத்தும் உனக்கு அர்பணித்தேன்

தூய நற்குரு துணை அருளை நாடு நெஞ்சமே!
குரு மலரடிய தேடு நெஞ்சமே - பாவன குரு...!

---------------------------------------
இந்த பாடலை KJ யேசுதாஸ் பாடிட இங்கே கேட்கலாம்

ராகம் : ஹம்சாநந்தி

கூடவே, குரு பெருமை பற்றி கபீரன்பன் தன் பதிவில் என்ன சொல்கிறார் பார்ப்போமா?

சுட்டுங்கள் இங்கே: