
இந்த முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாக இரு தரப்பிலும் இதற்கான முக்கிய பணியில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்று பார்ப்போமா?
இந்திய தரப்பு
எம்.கே.நாராயணன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
இந்த ஒப்பந்தத்தில் முக்கியமான முடிவுகளை எடுத்தவர். வாஷிங்டனில் நடந்த நாரயணன்-ஹேட்லி சந்திப்பில் இந்திய தரப்பின் கவலைகளை அமெரிக்கா செவி கொடுக்கத் தொடங்கியது என்பதால், அதற்கான பெருமை எம்.கே.நாராயணனைச் சேரும்!
ரோனென் சென், அமெரிக்காவுக்கான இந்திய தூதர்
துதராக அனைத்து சந்திப்புகளையும் ஒருங்கிணைக்கும் முக்கியமான பொறுப்பை ஏற்றவர்.
ஷ்யாம் சரண், பிரதமரின் சிறப்பு தூதர்
கடைசி கட்டம் வரை, முக்கிய முடிவுகளுக்கு ஆலோசகராக செயல்பட்டார். NSG யின் உறுப்பினர் நாடுகளை சந்தித்து அவர்களுக்கு இந்திய தரப்பினை விளக்கியவர்.
அனில் ககோட்கர், அணுசக்தித் துறை தலைவர்
இவருடைய சம்மதம் இல்லாமல் எந்த அணுசக்தி ஒப்பந்தமும் நிறைவேறாது என்ற நிலையில், எப்போதுமே, இந்த ஒப்பந்தத்தின் முன்னேற்றத்தில் ஒரு சந்தேகக் கண்ணுடனே செயல்பட்டார். இதனாலேயே பல சந்தேகங்கள் எழுத்து பூர்வமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.
சிவ சங்கர் மேனன், வெளியுறவுத் துறை செயலர்
கடைசி நிலையில்தான் இவர் சேர்ந்து கொண்டார். அணுசக்தித் துறையில் பணிபுரிந்தவர் என்பதால், விஞ்ஞானிகளுக்கும் ஓரளவுக்கு நம்பிக்கை ஏற்படக் காரணமாய் இருந்தது. அணுசக்தி துறைத்தலைவர் அனில் ககோட்கருக்கு ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் விரிவாக விளக்கினார்.
எஸ். ஜெய்சங்கர், தற்போது சிங்கபூருக்கான இந்திய தூதர்
ஒப்பந்தத்தின் எழுத்து பூர்வ வடிவத்திற்கு இவரும், இவருடைய அணியுமே பொறுப்பு. சின்ன சின்ன சந்தேகங்கள், சின்ன சின்ன நெருடல்களானாலும், அவற்றையெல்லாம் நேராக்கியவர். இவருடைய நேர்மையான அணுகுமுறைகள் அமெரிக்க தரப்பில் இவருக்கு பெரியதொரு நன்மதிப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்க தரப்பு
காண்டலீசா ரைஸ், Secretary of State
ரைஸ் அதிகமாக நேரடியான ஈடுபாட்டில் இறங்காவிட்டாலும், தனக்கு கீழுள்ளவர்கள் சரியாக பணிகளில் ஈடுபடுத்தி, ஒப்பந்தம் நிறைவேறும்படி பார்த்துக்கொண்டார்.
ஸ்டீபன் ஹேட்லீ, NSA
முக்கிய சந்திப்புகளுக்கு தலைமை தாங்கிய இவர், இந்தியாவின் கவலைகளை எடுத்துக்கொண்டு State Department க்கு எடுத்துச் செல்லும் கடினமான பணியை மேற்கொண்டார்.
நிக்கலோஸ் பர்ன்ஸ், Political Affairs, Department of State
ஒப்பந்தம் நிறைவேருவதில் தொய்வு ஏதும் ஏற்படாமல் தொடர்ந்து பார்த்துக் கொண்டு அமெரிக்க தரப்பினையும் முடுக்கி விட்டுக் கொண்டிருந்தார்.
நிச்சர்ட் ஸ்டார்ட்போர்ட், அணுசக்தித் துறை, Department of State
இந்திய தரப்பில் இருந்து எந்தக் கேள்வி வந்தாலும், அதற்கான பதிலுடன் தயாராக இருந்தார். ஒப்பந்தத்தின் ஒவ்வொரு நடப்பும் பயனுள்ளதாக நிறைவேரும் படி பார்த்துக் கொண்டார்.
டேவிட் முல்போர்ட், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர்
தூதரக இரண்டு தரப்புக்கும் இடையே பாலமாக திகழ்ந்த இவர், தேவைப்பட்ட நேரத்தில் புஷ் மற்றும் மன்மோகன் சிங் இருவரையும் தொலைபேசியில் பேச வைத்து, ஒப்பந்தத்திற்கான அரசியல் தலையீடுகளை பார்த்துக் கொண்டார்.
ஆஷ்லி டெல்ஸ், Carnegie Endowment of International Peace
எஸ்.ஜெய்சங்கர் இவருடைய நிறுவனத்திற்கு வந்து, இந்தியாவின் தரப்பை விரிவுரையாய் கொடுத்த பின், அதன் சாரத்தை State Department க்கு எடுத்துச் சொன்னவர்.
ஜியோபெரி பயட், முன்னாள் அமெரிக்க தூதரக பணியாளர்
ஒப்பந்தம் நிறைவேறுவதற்கு இரண்டு நாள் முன் வரை, இந்திய தூதரகத்தில் செயல்பட்ட இவர், இந்திய தரப்பை அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்வதில் பெரும் பங்கு வகித்தவர்.