Monday, May 30, 2011

முதல் வணக்கம்

அன்பெனும் கணபதிக்கு முதல் வணக்கம்
ஆனைமுகனுக்கு முதல் வணக்கம்
அரும்பெரும் செவியனுக்கு முதல் வணக்கம்
ஆதாரத் துணைவனுக்கு முதல் வணக்கம்!

உமைபாலனுக்கு முதல் வணக்கம்
ஊறும் சக்தியதன் உறைவிடமே முதல் வணக்கம்
ஊழ்வினை விலக்குபவனே முதல் வணக்கம்
உந்தீபறவென உரைக்கின்றேன் முதல் வணக்கம்!

மதியணி சங்கரன் மகனுக்கு முதல் வணக்கம்
மாலவன் மருகனுக்கு முதல் வணக்கம்
மனங்கவர் முருகனின் மூத்தவனுக்கு முதல் வணக்கம்
மூஷிக வாகனனுக்கு முதல் வணக்கம்
மறையதன் மெய்ப்பொருளுக்கு முதல் வணக்கம்
மூலாதார முதல்வனுக்கு முதல் வணக்கம்
முழுமுதற் கடவுளுக்கு முதல் வணக்கம்!

அகர உகர மகரமென ஒலிக்கும்
ஓங்காரப் பிரணவமே முதல் வணக்கம்!

4 comments:

  1. முதல் வணக்கம்...

    ஊழ்வினை விலக்குபவனே
    முதல் வணக்கம்
    உந்தீபறவென உரைக்கின்றேன்
    முதல் வணக்கம்!

    முதல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,
    முதல் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!

    ReplyDelete
  3. ஆஹா, நண்பருக்கு வணக்கம்.. வணக்கம்.

    ReplyDelete
  4. வாங்க கீதாம்மா!
    வணக்கம்.
    ஏனொ தெரியலை- உங்க மறுமொழியைப் பார்த்தபின் இன்னுமொரு வணக்கம் சொல்லத் தோணுது:
    மோதகப் பிரியனுக்கு முதல் வணக்கம்!

    ReplyDelete