பகுதி 2:
Showing posts with label இயல். Show all posts

Sunday, January 22, 2012
Friday, September 26, 2008
கனவில் வந்த கதைகள் : விழிக்குத் துணை
அன்றைக்கு அந்த ஆறு லேன் சாலையில் என் வாகனத்தை சீரானதொரு வேகத்தில் நிறுத்திப் பயணித்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து லேனில் சென்று கொண்டிருந்த திறந்த கார் என் கவனத்தை ஈர்த்தது. அந்த காரின் பின் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் 'Hello Uncle, Where are you? In Search of you - NORA.' அந்த வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த இளைஞன், காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டிருந்தவாறு, ஏதோ தாளத்திற்கு ஏற்றாற்போல் தலையை வேகமாக அசைத்தவாறு இருந்தான். அவனைப் பார்த்தவாறும், அந்த வாசகத்தை படித்தவாறும், ஒன்றும் புரியாமல், நானிருக்க, சற்றுத் தொலைவில் இன்னொரு லேனில் வந்து கொண்டிருந்த காரில் இருந்து ஒரு நபர், இந்த இளைஞனை நோக்கி கையசைத்து, சமிஞ்சை காட்டினார். ஆனால் அந்து இளைஞனோ அதை கவனிக்கவில்லை. லேசாக அவர் காரின் ஹார்னை அழுத்தி, ஒலி எழுப்பியும், அவனது கவனத்தை அவரது பக்கம் திருப்பிட இயலவில்லை. சற்று நேரத்தில் அந்த இளைஞனின் கார், அடுத்த சாலைத் திருப்பத்தில், திரும்பிவிட, அவர் முகமும் அந்த கார் சென்ற பக்கமாய் திரும்பிப் பார்த்தது. அவரது முகத்தை எங்கோ பார்த்ததுபோல் இருந்திட, அவரைக் கூர்ந்து கவனித்தேன். ஆ, ப்ரொபசர் மனோகர் தான் அவர், எனக் கண்டுகொண்டேன்.
அந்த சம்பவத்தை அப்போதே மறந்து விட்டேன். அன்றைக்கு மாலை, கந்தர் அலங்காரப் பாடல்களை படித்து, ஒரு பாடலுக்கு விளக்கத்தினை கூகிளில் தேடிக்கொண்டிருக்கையில், மீண்டும் அந்த இளைஞன் நோராவைச் சந்திக்க நேர்ந்தது - பதிவர் நோராவாக! ப்ரொஃபைலில் இருந்த அவனது புகைப்படத்திலிருந்து, அவன் அன்று காரில் பார்த்த அந்த இளைஞன்தான் என்பதையும் உறுதிப் படுத்தியது. அவனது ப்ளாக்கில் இருந்த பதிவுகளைப் பார்த்த போது, சில வருடங்களுக்கு முன், நிறைய ஆன்மீகப் பதிவுகளை, குறிப்பாக முருகன் பற்றி நிறைய எழுதி இருந்ததெல்லாம் பார்த்து, ஆச்சரியத்தில் மூழ்கலானேன். சடாரென்று ஒரு எண்ணம் தோன்றியது, இந்த இளைஞனுக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பி, இவன் தேடும் அங்கிள் பற்றியான விவரத்தை தெரிவிக்கலாமே என்று.
அவனுக்கு மின் அஞ்சல் எழுதும் போதுதான் தோன்றியது, இந்த இளைஞனை இந்த சாக்கிட்டு நம் வீட்டில் விருந்துக்கு அழைத்து, அவனிடம் கந்தர் அலங்காரம் பற்றி கொஞ்சம் பேசித் தெரிந்து கொள்ளலாமே என்று! அப்படியே மின் அஞ்சல் தட்டி விட்டேன். என் வீட்டு முகவரியோடு. அந்த இளைஞனிடம் இருந்து, சிறிது நேரத்தில் பதில் வந்தது. அவனது அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் தான் என் வீடு இருக்கிறதென்றும், அந்த வழியில் வந்து நாளை மாலை என்னைப் பார்ப்பதாகவும்.
அந்த மாலையும் வந்தது. ப்ரொபசர் மனோகரின் வீடு இருக்கும் இடம் எனக்குத் தெரியுமாதலால், விருந்துக்குப்பின், நோரோவை, நானே ப்ரொபசரின் வீட்டுக்கு அழைத்துப்போவதாக திட்டம். விருந்தின் போது பொதுவான விஷயங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். விருந்தும் முடிந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் ப்ரொபசர் மனோகரின் வீட்டுக்குப் புறப்படலாம் என்று பேசிக்கொண்டோம். அதற்குமுன் அவரிடம் தொலைபேசியில் நாங்கள் வருவதை தெரிவிக்க கூப்பிட்டோம். முதலில் நான் அவரிடம் பேசிவிட்டு, தொலைபேசியை நோராவிடம் தந்தேன்.
அவர்கள் உரையாடத் துவங்கினார்கள்.
'அலோ அங்கிள். போன வாரம்தான் இந்த ஊருக்கு வேலை மாற்றலில் வந்தேன். உங்கள் முகவரியும் தொலைபேசி எண்ணும் இல்லாததால் எப்படி தொடர்பு கொள்ளுவதென விழித்துக் கொண்டிருந்த போது, இப்படி காரில் விளம்பரப்படுத்தலாம் என தோன்றிற்று. சின்ன உலகம் பாருங்கள், கை மேல் பலன்' என்றான் நோரா.
இப்படியாக தொடர்ந்த பேச்சினை கவனிக்காமல் எதோ செய்து கொண்டிருக்கும் என் கவனத்தையும் ஈர்த்தது, தொடர்ந்த அவர்களது பேச்சு.
'அங்கிள், இன்றிறவே நமது Reuniuon-ஐக் கொண்டாடலாம். வரும்போது என்னென்ன பொருட்கள் வாங்கி வர சொல்லுங்கள்....ஆங்... முக்கியமாக ஒரு 24 பேக் பியர் கேன், அப்புறம் காண்டோம் - இதெல்லாம், வாங்கி வந்துடறேன்...மஜா பண்ணிடலாம்' என்றான் நோரா.
அவர்கள் பேச்சு முடிந்த கையோடு, நோராவின் ப்ளாகைப் பற்றியும், கந்தர் அலங்காரம் பற்றியும் பேச்சைத் துவங்கினேன், நான்.
'அதெல்லாம் அந்தக்காலம். அப்போது எங்கள் தமிழாசிரியரின் தூண்டுதலால், தமிழார்வம் ஏற்பட்டு, நிறையப் படித்ததுண்டு. அகராதி கொண்டு, பல பழந்தமிழ் பாடல்களின் பொருளை ஷெர்லாக் ஹோம்ஸ் போல தேடிக் கண்டுபிடித்து, எழுதுவதில் ஒரு 'திரில்' இருந்தது.' என்றான் நோரா.
'இப்போது...?', என ஆவலோடு வினவினேன் நான்.
'இப்போ, பல ஊர்களுக்கும், நாடுகளுக்கும் பயணிக்கிறேன். வாழ்க்கையை அனுபவிக்க, இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது எனத் தெரிந்து கொண்டேன். செல்லும் இடத்தில் நட்பு வட்டாரங்களை ஏற்படுத்திக் கொண்டு, வாழ்க்கையை அனுபவிக்கிறேன்' என்றான்.
'சரி. அனுபவித்துக் கொண்டே இருக்கும் போது, திடீரென ஒருநாள் இந்த அனுபவிப்பையெல்லாம் துறக்க வேண்டும் என்றால் இயலுமா' என வினவினேன்.
'ஏதற்காக துறக்க வேண்டும்?' என்றான் அவன்.
'உனக்கும் உலகுக்கும் இருக்கும் தொடர்பு எந்த அளவில் என்பதைக் கணிக்க... அதைவிடு. சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்லேன்.' என்றேன் நான்.
'நல்லா திளைத்து விட்டால், எப்படி துறக்க இயலும்?' என்றான்.
'அப்போ கற்றதனால், ஆய பயனென் கொல்?' என்றேன்.
'ஓ, நீங்க அங்கே வரீங்களா?. இந்த தமிழ் இருக்கே, அதுவும் மது போல. அதைக் கற்க கற்க கிடைத்த இன்பத்தில் திளைத்தேன். அது தந்த இன்பம் போல், இப்போது இன்னும் பலவும் இருக்கக் கண்டேன். எனக்கு இவற்றில் வேறுபாடில்லை.' என்றான்.
இதுபோல மொழியின் வசத்தில் சிக்கி, அதைத்தாண்டி செல்ல இயலார் நிறைய பேர் உண்டு' என என் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன், அவனிடம் சொல்லவில்லை. ஆனால், இதை மட்டும் சொன்னேன்.
'இருக்கட்டும். எந்த இன்பத்தில் திளைத்தாலும், அதனோடு உனக்குள்ள தொடர்பின் நீளத்தை அறிந்துகொள். அதை சரியாக கணக்கிட்டு வைத்திருக்கும் பட்சத்தில், அதை துறப்பதும் எளிதாகும். உனக்கு நன்கு பழக்கப்பட்டிருக்கும் கந்தர் அலங்காரச் செய்யுளையும், அப்படி தேவைப்படும்போது, மனதில் நினைத்துக்கொள்:
அவன் என்னை ஒருமாதிரி பார்த்துக் கொண்டிருக்க, அந்த தருணத்தை முடிவுக்கு கொண்டு வருவதுபோல், 'என்ன ப்ரொபசர் வீட்டுக்கு கிளம்பலாமா?' என்றேன். அவ்வாறாகவே செய்தோம்.
கனவும் கலைந்தது.
மெய்ம்மை?: சுட்டி!

“விழிக்குத்துணை திருமென் மலர்ப்பாதங்கள் மெய்ம்மை குன்றாவிழிக்கு - மொழிக்கு - பழிக்கு - தனி வழிக்கு - இவை யாவைக்கும், இன்னும் நீ சாதிக்க விரும்பும் இன்ன பிறவற்றிற்கும், அவனைத் துணையாக கொண்டால், இயலாதது இல்லையப்பா.' என்றேன்.
மொழிக்குத்துணை முருகாவெனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத்துணை அவன் பன்னிருதோளும் பயந்த தனி
வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே”
அவன் என்னை ஒருமாதிரி பார்த்துக் கொண்டிருக்க, அந்த தருணத்தை முடிவுக்கு கொண்டு வருவதுபோல், 'என்ன ப்ரொபசர் வீட்டுக்கு கிளம்பலாமா?' என்றேன். அவ்வாறாகவே செய்தோம்.
கனவும் கலைந்தது.
மெய்ம்மை?: சுட்டி!
Tuesday, May 15, 2007
கூரையில் ஜன்னல்
ப்ரியாவும், ரகுவும் அந்த சூப்பர் சைஸ் ஓவியத்தை கண் கொட்டாது பார்த்துக்கொண்டு இருந்தார்கள், அண்ணார்ந்து. ஏனெனில், அது புதுமையாக சுவரில் இல்லாமல் வீட்டுக் கூரையில் தெரிந்தது... ஆம், கூரையின் வழியாக, பௌர்ணமி தினத்தின் முழுமதியின் துணையில் தெரிந்தது. நிலவின் ஓளி கீற்றைகள், என்னதான் வெள்ளை நிறத்தை சேந்த்தாலும், அந்த ஓவியத்தின் தூரிகை இன்னமும் கரு நீல நிறத்தில்தான் இருந்தது. ஆங்காங்கே, விண்மீன்கள் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. இதுவே நண்பகல் நேரமாயிருந்தால், ஆதவனின் அதிகப்படியான வெளிச்சத்தில் இந்த தொலைதூரத்து நட்சத்திரங்கள் கண்ணில் தெரியாமல் போயிருக்கும். எல்லாம் ஒரே நீள வெள்ளைத்திரையை விரித்தாற்போல் இருக்கும். நல்லவேளை. இது முன் இரவு நேரம். கொஞ்ச நேரத்தில் கண் அயர்ந்தால், கனவு உலகத்தில் சயனிப்பு. அதற்குமுன் இங்கேயே வேற்று உலகின் தூர தரிசனம், இதோ கூரையில் இப்போது.

(படம் மூலம்: ப்ராஸ் எக்ஸ் கோஹல்ஹாஃப்)
கூரையில் கண்ணாடி ஜன்னலை நிர்மாணித்தது இப்படி ரம்யமானதொரு வானத்தை கையருகே கொண்டுவந்து நிறுத்தும என்றெல்லாம் அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. சூரிய ஒளியை பகல் நேரத்தில் பெருவதற்குத்தான் இந்த ஏற்பாடு. ஆனால், எதிர்பார்ப்பின் இன்னொரு பக்கம், எதிர்பாராமல் இதம் தந்தது.

(படம் மூலம்: அமீர் ஹோஸைன் அபோல்ஃபா)
நிலத்தை நடந்தோ, ஊர்தியில் பயணித்தோ அளவிட முடியும். நீந்தத் தெரிந்தவர்கள், நீர்ப்பரப்பிலும் அதன் ஆழங்களிலும் அதன் எண்ணிலடங்கா வளங்களை அருகில் சென்று பார்க்க முடியும். விண்வெளியை மட்டும் வெகு தொலைவில் இருந்து கண்டுணர, அதில்தான் எத்தனை எத்தனை விந்தைகள்!
இப்போதைக்கு நட்சத்திரங்கள் மட்டும் இல்லாமல், வெள்ளி கோளும் கண்ணுக்குத் தெரிகிறது.
நள்ளிரவு நகர நகர நிலவு இல்லாத புதன் கிரகமும் கண்ணுக்குத் தெரியுமாம். அவ்வளவு நேரம் விழித்திருப்போமா தெரியவில்லை. இப்போதைக்கு கண்ணுக்கு தெரியும் நட்சத்திரங்களை கோர்த்து ஒருவம் ஏதாவது வருகிறதா? ஆ, இரட்டையர்கள் கொண்ட ஜெமினியோ?

Saturday, March 26, 2005
கொய்யா
நீண்ட நாட்களுக்குப்பின் கொய்யாப்பழரசம் சாப்பிட்டேன். விட்டுப்போன, தொட்டுப்போன சுவை நாக்கில் வந்து ஒட்டிக்கொண்டது. ஆஹா, இவ்வளவு நாளாக, இதை விட்டுப்பிரிந்தேனே என்றெண்ணுகிறேன். சுவையோடு சேர்ந்து பழைய நினவுகளும் வந்து நிழலாடத்துவங்கின.
சிறு வயதில் கொய்யாப்பழத்தின் மீது அவ்வளவு ப்ரியம் இருந்ததில்லை. கொய்யா பழத்தில் இரண்டு வகை உண்டு. ஒரு வகை கொய்யாவின் உட்புறம் கனிந்தாலும் வெள்ளையாக இருக்கும். மற்றொரு வகையிலோ, கொய்யா கனிந்தபின் உட்புறம் சிவப்பாக இருக்கும். இந்த சிவப்பு கொய்யாவில் இனிப்புச்சுவை அதிகமாக இருக்கும். நல்ல காய் வாட்டமாக கொய்யா இருக்கும்போது, அது சிறிது துவர்ப்பாக இருக்கும். இதற்கெனவே, கொய்யாக்காயை விரும்பிச்சாப்பிடுவோரும் உண்டு. ஆனால், நானோ கனியிருக்க காய் கவர்ந்தட்று என்று, காயைக்கொள்வேனில்லை. அம்மா சொல்கிறார்கள் என்பதற்காக, ஒன்றே ஒன்று மட்டும் சாப்பிடுவேன் போலும்.
இப்போதெல்லாம், பழங்கள் மட்டுமே விற்கும் பழக்கடைகள் கூட வந்து விட்டன.
அந்த நாட்களில் பல்பொருள் அங்காடிகள் ஒன்றிரண்டுதான் இருக்கும். சின்னஞ்சிறு கடைகள் நிறைய உண்டு. சிறிய கடைகளிலில் வாழைப்பழத்தைத் தவிர மற்ற பழங்கள் விற்றதாக நினைவில்லை. மற்றபடி, பழம் வாங்க வேண்டுமென்றால் மொத்த விற்பனை செய்யும் மார்க்கெட்டுக்குத்தான் செல்ல வேண்டும்.
கூடையில் பழங்களை சுமந்துகோண்டு கூவி விற்போருண்டு. பெரும்பாலும் பெண்கள், சிலசமயம் வயதான ஆண்கள். தெருவில் 'கொய்யா,கொய்யா' என்று குரல் வரும். அவர்களுக்கு பிழைப்பே அதுதான். வேகாதவெய்யிலில் தளரா நடையுடன், நம்பிக்கையை கையில் பிடித்துக்கொண்டு, பழம் வாங்கலையோ என்று கேட்பார்கள். பெரும்பாலும், கூடையில் பழம் விற்பவர்களிடமே அம்மா பழம் வாங்குவார், பேரம் பேசி. விற்பவர்கள் சில சமயம், 'அம்மா, நீதான் முதல் போணி, இப்படி கொறைச்சுக் கேட்டா எப்படி' என்று வினவுவார்கள். நாமும், நியாமான விலைக்கு வந்து விட்டோம் என்றெண்ணி, வாங்கிவிடுவோம்.
பெரும்பாலும், வெள்ளை கொய்யாக்கள்தான் கிடைக்கும். சிலசமயமே கனிந்த சிவப்பு கொய்யா கிடக்கும். அதுவும் வெளிப்புறத்தில் இருந்து பார்த்தால், வெள்ளையா, சிவப்பா என்று தெரியாது. விற்பவர் சொன்னல்தான் உண்டு. சிலசமயம் சாப்பிட்டுப்பாரம்மா என்று, மாதிரிக்குத் தருவார்கள். அப்போது நிச்சயம் நன்றாகத்தான் இருக்கவேண்டும். அங்காடிக்குச் சென்று வாங்கினால் இந்த வசதி இருக்காது என நினைக்கிறேன்.
சில கொய்யாக்களில் விதைகள் நிறைய இருக்கும். முற்றிய விதைகள் சுவைக்குத்தடை. மற்றபடி, கொய்யாக்களின் சுவையே தனி. துவர்ப்பும், இனிப்பும் கலந்து, நாவை வருட, ஐம்புலன்களில் ஒன்றை திருப்திப்படுத்தியாயிற்று. அவன் இசைவோடு.

Subscribe to:
Posts (Atom)