அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சயமானன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயமாகவன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?
- அபிராமி அந்தாதி
துதி சயமானன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயமாகவன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?
- அபிராமி அந்தாதி
இப்படி, அப்படி என எப்படிச் சொல்ல இயலும்?
பெரொளி கூட்டி, பெருநிறைக் காட்டி, ஈதன்றி வேறில்லை எனவிருக்கையில் வேறெப்படிச் சொல்ல இயலும்.
அதிசயம்! ஆம், அதிசயம்!
ஒப்பிலா சொல்லில் அதிசய வடிவில்
மெச்சிடும் பேச்சாய் நிற்பாள் அன்னை!
அன்னையவளைப் பாடும் அபிராமிபட்டரின் அந்தாதி சொல்லும் சந்தத்தை சிந்தித்திருக்கையில் அங்கயற்கண்ணியைப் பாடும் மாமேதை நீலகண்ட சிவன் அவர்கள் இயற்றிய பாடல்கள் - ஒன்று மட்டுமல்ல - மூன்று பாடல்களைச் இங்கே சுவைக்கப்போவது சுகம்.
~~~~~~~~~~~
1.
இராகம் : கரஹரப்ரியா
தாளம் : ஆதி
பாடுபவர் : திரு. உன்னி கிருஷ்ணன்
anthari_sundari-ka... |
எடுப்பு
அந்தரி சுந்தரி காமாக்ஷி என
அருள்புரியும் மாமதுரை மீனாக்ஷி
தொடுப்பு
சுந்தரேசர் வாமாங்க மேவிய ஆனந்தம் ஓடுஞ்
சுகமுங் கைக்கொண்டு நாமுமக மகிழ்ந்துறவாடும்
முடிப்பு
மும்மலைத் தடாதகை எனப்புவி மீது உதித்தாய்
முழுதுலகமும் வென்று வீர முடி தரித்தாய்
செம்மையாய் உலகாண்டு ஜகம் புகழ்ந்திட வைத்தாய்
திருநீல கண்டர் பாதி உடற் அலங்கார முற்றாய்.
~~~~~~~~~~~
2.
இராகம் : நாட்டைகுறிஞ்சி
தாளம் : ஆதி
எடுப்பு
ஏனிந்தத் தாமதம் மீனாட்சி மனம்
இரங்கி வந்து தந்தருள் திருக்காட்சி
தொடுப்பு
நீ நினைந்தால் நடவாததும் உண்டோ
நித்திய கல்யாணி யென்பெற்றவளே கண்டாய்
முடிப்பு
சோதனை யாமென்றாலும் நான்மனம் பொறுக்கேன்
துரும்பெனத் தள்ளினாலும் இனியுனை வெறுக்கேன்
நீதனை யாலவாயில் நீலகண்டனை மேவி
நிரந்தர வருள்புரிந்து எதுந்தரும் பரதேவி.
~~~~~~~~~
3.
இராகம் : வராளி
தாளம் : மிச்ரசாபு
எடுப்பு
கருணை புரியிதுதருணம் மீனாக்ஷி நானுன்னடிமை
சரணம் உனக்கே சரணம் ஜகத்ஸாக்ஷி
தொடுப்பு
பெருமை யுறுமது ராபுரித் தனி
யரச பெரும் சுந்தரேசர் மனோன்மணி
அருணிறைந்த கடாக்ஷ வீக்ஷணி
அம்பிகே யுன்னை நம்பினேன் இனி
முடிப்பு
நீல வேணி நிறைந்த பூஷணி
லீலைதரு முக்கதர பாண்டிய ஜனனீ
சீல மிகு பரதேவி சீகபாணி
நீல கண்டர் மனோல் லாசினி.
Listened the first song. Waiting for the next two. :-)
ReplyDeleteவாங்க குமரன்!
ReplyDeleteஇந்தப்பாட்டு மட்டும் தான் கிடைச்சது இப்போது. மண்டபத்தில் யாராவது மற்ற இரண்டு பாடல்களைப் பாடறாங்களான்னு பார்க்கிறேன் :-)
பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅன்னைக்கு நான் சூட்டிய பாமாலையை கேட்க வாருங்கள்
www.arutkavi.blogspot.com
//மண்டபத்தில் யாராவது மற்ற இரண்டு பாடல்களைப் பாடறாங்களான்னு பார்க்கிறேன் :-)//
ReplyDeleteமண்டபத்தில் என்னைப்போன்ற மண்டூகங்கள் தான் தற்பொழுது இருக்கின்றன.
மேதைகள் எப்பொழுது வருவார்களோ ? தெரியவில்லை.
நானும் பொறுமையுடன் காத்திருப்பேன்.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
நீலகண்ட சிவனாரின் 'அந்தரி சுந்தரி' கீர்த்தனை உன்னிகிருஷ்ணனின் குரலில் உருகி ஓடுகிறது.. எடுப்பில், அந்த முன்வரி 'காமாட்சி'க்கேற்ப அடுத்த வரியில் 'மாமதுரை'யை இழைத்துக் கொடுக்கும் நேர்த்தி அற்புதம்.
ReplyDeleteதொடுப்பின் இரண்டாவது வரியில்,
'சுகமுங் கைக்கொண்டு நாளுமக மகிழ்ந்துறவாடும்' என்பது இன்னொரு பாட பேதம் போலும்.
நல்ல கீர்த்தனைகளை நினைவுக்குக் கொண்டு வந்த நல்ல பதிவு.
வாருங்க்கள் சிவகுமாரன்,
ReplyDeleteஉங்கள் பாமாலை இனிது, இனிது.
சூரி ஐயா,
ReplyDeleteதங்கள் என்னதான் தன்னடக்கமாய் சொன்னாலும் - எங்களுக்குத் தெரியுமல்லவா!
ஜீவி ஐயா,
ReplyDeleteபாடலை கவனித்து கேட்டுச் சொன்னமைக்கு நன்றிகள்.
'நாளும் அகமகிழ்ந்து' எனபது இன்னும் பொருத்துமாக இருக்கிறது. அப்படியே மாற்றி விடலாமென நினைக்கிறேன்.
மேலும் உன்னிகிருஷ்ணன் பாடும் 'மலையத்வஜன்...' எனத்துவங்கும் வரிகளையும் சேர்க்கவேண்டும்.
அருமையான கீர்த்தனைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDelete