யானைப் பாட்டு!
பாடகர்:
யானை யானை யானை!
மரங்களில் தாவும் யானை!
மழலை:
இல்லை, மரங்களில் தாவுவது குரங்கு!
பாடகர்:
ஆமாம், மரங்களில் தாவும் குரங்கு!
குரங்கு, கடலில் நீந்தும் குரங்கு!
மழலை:
இல்லை, கடலில் நீந்துவது மீன்கள்!
பாடகர்:
ஆ.., கடலில் நீந்துவது மீன்கள்!
மீன்கள், குரைக்கும் மீன்கள்!
மழலை:
இல்லை, இல்லை, குரைப்பது நாய்கள்!
பாடகர்:
அட,ஆமாம்!, குரைப்பவை நாய்கள்!
நாய்கள், எலிகளை துரத்தும் நாய்கள்!
மழலை:
இல்லை, எலிகளை துரத்துபவை பூனைகள்!
பாடகர்:
ஆமாம்,ஆமாம்!, எலிகளை துரத்துபவை பூனைகள்!
பூனைகள், கொக்கரக்கோ எனக்கூவும் பூனைகள்!
மழலை:
இல்லை, பூனைகள் மியாவ் எனக் கத்தும்.
கொக்கரக்கோ எனக்கூவுவது சேவல்!
பாடகர்:
சரிதான், கொக்கரக்கோ எனக்கூவுவது சேவல்!
சேவல், தேனீக்கூட்டில் ஏறித் தேனெடுக்கும் சேவல்!
மழலை:
இல்லை, இல்லை, தேனீக்கூட்டில் ஏறித் தேனெடுப்பது கரடி!
பாடகர்:
ஆமாம்!, தேனீக்கூட்டில் ஏறித் தேனெடுப்பது கரடிகள்!
கரடி, நாக்கை நீட்டி பூச்சியைப் பிடிக்கும் கரடி!
மழலை:
இல்லை, இல்லை, நாக்கை நீட்டி பூச்சியைப் பிடிப்பது தவளை!
பாடகர்:
ஆமாம், நாக்கை நீட்டி பூச்சியைப் பிடிப்பது தவளை!
பெரிய தும்பிக்கை கொண்டது தவளை!
மழலை:
இல்லை, இல்லை, தும்பிக்கை கொண்டது யானை!
பாடகர்:
அட, ஆமாம், அதான் முதல்லேயே சொன்னேனே யானை என்று!
இது யானைப் பாட்டு என்று!
மழலை:
உனக்கு யானையைப் பற்றி ஒண்ணும் தெரியலை!
எந்த விலங்கைப் பற்றியும் தெரியலை!
பார்த்தாச்சா, இதுபோலத்தான் 'நேதி நேதி' யும்...
"நேதி நேதி" ன்னு ஆத்ம போதம் பகுதியிலே முன்பே பார்த்திருக்கோம் அல்லவா இங்கே!