Sunday, May 17, 2020

காணக் கண் கோடி வேண்டும்

காணக் கண் கோடி வேண்டும்
காம்போதி ராகம்
பாபநாசம் சிவன் பாடல்



எடுப்பு

காணக் கண் கோடி வேண்டும் - கபாலியின் பவனி

காணக் கண் கோடி வேண்டும் (காணக்)


தொடுப்பு
மாணிக்கம் வைரம் முதல் நவரத்னாபரணமும்
மணமார் பற்பல மலர் மாலைகளும் முகமும் 


மதியோடு தாராகணம் நிறையும் அந்தி
வானமோ 

கமலவனமோ


என மனம்
மயங்க அகளங்க அங்கம் யாவும்-
இலங்க அபாங்க அருள் மழை பொழி பவனி (காணக்)


முடிப்பு
மாலோடையன் பணியும்

மண்ணும் விண்ணும் பரவும்

மறை ஆகமன் துதிக்கும் இறைவன் அருள் பெறவே

காலம் செல்லுமுன் கனதனமும் தந்தார்க்கு நன்றி
கருதிக் கண்ணாரக் கன்டுள்ளுருகிப் பணியப் பலர்
காண 


அறுமுகனும் 



கணபதியும் 


சண்டேச்வரனும்

சிவகணமும் 


தொடரக் கலை வாணி திருவும் பணி கற்பக நாயகி

வாமன் அதிகார நந்தி சேவைதனைக் 


காணக் கண் கோடி வேண்டும்!


Sunday, May 26, 2019

நாராயண திவ்ய நாமம்

இராகம் : மோகனம்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

எடுப்பு
நாராயண திவ்ய நாமம்
நான் மறை சொல்லும் நாயகன் திருநாமம்
நாவிற்கினிய நாராயண திவ்ய நாமம்

தொடுப்பு
ஆராவமுதாய் ஆறு வயதிலே அன்பு செய்
துருவன் உணர்ந்த மந்திரம்

முடிப்பு
நாரதாதி முனிவரும் சனகாதி யோகியரும் பிரக்லாதனும் எந்நாளும்
மனோலயமுற வாயாற பஜிக்கும் ஆனந்த நாமம் பேரானந்தம்
இருந்தாலும் கோர பவசாகரத்தில் ஆழ்ந்துழலும் நம்மை மிக
ப்ரேமையுடன் கைதூக்கி அபயமருள் வேத சார தாரக நாமம்
பூரணன் திருமகள் மணவாளன் பாற்கடலில் அரவணைதுயில் வரதன்
புனித கருட வாகனன் நீல முகில்போலும் மேனி அழகன் திருநாமம்
மாரஜனகன் கருணாலயன் அன்பர் துன்பம் அகல மங்களம் அருள்வோன்
வைகுண்டபதி பாவன நாமம் வணங்கும் ராமதாசன் கண்டுகொண்ட
(நாராயண திவ்ய நாமம்)

 நாராயண! நாராயண!

எம்.எஸ்:
 
சஞ்சய் சுப்ரமணியம்: