ஹரி என்பாருண்டு. ஹரன் என்பாருண்டு.
ஹரியே ஹரன், ஹரனே ஹரி என்பாருண்டு.
ஹரிஹரன் என்பாருண்டு.
சைவமும் வைணவமும் தழைத்தோங்கிய தமிழகத்தில் அரியையும் அரனையும் அன்பர்கள் தத்தம் நெஞ்சிலேற்றி, அதில் விஞ்சிய அன்பினை, அமுத கானங்களாக நமக்கு தந்துவிட்டுச் சென்றுள்ளார்கள்.
நிலாத்துண்டு சூடும் பெம்மானாகட்டும், அரவின் அணை அம்மானாகட்டும் - இருவருமே மெய்யன்பர்களின் பாட்டுடைத் தலைவனாய் பரிமளிக்கும் பாங்குதான் என்னே! சில சமயம் இருவரையும் ஒரே பாடலிலே கூட பாடப் பெற்றுள்ளார்கள். அப்படிப்பட்ட சில பாடல்களை இங்கு பார்ப்போம்.
பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றிய "மா ரமணன் உமா ரமணன்" ஹிந்தோள இராகப் பாடல்.
எடுப்பு
மா ரமணன்
உமா ரமணன்
மலரடி பணி மனமே- தினமே
தொடுப்பு
மாற ஜனகன்
குமார ஜனகன்,
மலைமேல் உறைபவன்- பாற்கடல்
அலைமேல் உறைபவன்- பாவன
முடிப்பு
ஆயிரம் பெயரால் உரைத்திடும்
ஆயிரம் உருமாறினும்
உயர் தாயின் மிகு தயாபரன்- பதம்
தஞ்சம் என்பவரை அஞ்சல் என்றருளும்
உன்னிகிருஷ்ணன் அவர்கள் பாடிட கேட்கலாம்:
அடுத்த பாடலில், நீலகண்ட சிவன் அவர்கள் கண்டேஸ்வரனையும், பத்மநாபனையும் இணைத்துப் பாடியுள்ளார்கள்.
இயற்றியவர்: நீலகண்ட சிவன்
பண்: காந்தார பஞ்சமம்
இராகம்: கேதாரகௌளை
தாளம்: மிஸ்ரசாபு
எடுப்பு
ஸ்ரீகண்டேஸ்வரனை ஸ்ரீ பத்மநாபனைத்
தரிசனம் செய்வோமே
தொடுப்பு
நாகம் தரித்தோரவர் நாகம் மேல் படுத்தோரவர்
ஏகமாய் இருவரிப் வைபவம் சேவித்து
முடிப்பு
அன்னபூர்ணேஸ்வர் மனையாளிவருக்குண்டு
அஷ்டலக்ஷ்மி மனையாட்டி யவருக்குண்டு
பொன்னும் கிரியும் வெள்ளி மலையுமிவரிக்குண்டு
பொங்கும் பாற்கடல் நவமணிகளிவர்க்குண்டு
உன்னத இடப வாகனமிவர்க்குண்டு
உயர்ந்த பறக்கும் கருடன் அவர்க்குமுண்டு
தன்னிய பாணன் முதல் தாசர்களிவர்க்குண்டு
சாது பிரகலாதன் முதலானோர் அவர்க்குமுண்டு
இப்பாடல் கோபாலகிருஷ்ண பாரதியாரின் "தில்லையம்பலத்தானை" பாடலை நினைவு படுத்துகிறதல்லவா! இதோ அந்த பாடலும்:
இயற்றியவர்: கோபாலகிருஷ்ண பாரதி
ராகம் : சஹானா
தாளம்: மிஸ்ரசாபு
எடுப்பு
தில்லையம் பலத்தானை கோவிந்தராஜனை
தரிசித்துக் கொண்டேனே
தொடுப்பு
தொல்லுலகமும் படியளந்து மனதுக்கேற்கும்
தொண்டர் கலி தீரக் கருணை பொழியுமெங்கள்
முடிப்பு
தும்பைப்பூ மாலைகள் தொடுத்துக் கொடுப்பதிங்கே
துளசிக்கொழுந்தெடுத்துக் தொட்டுக் கொடுப்பதங்கே
அம்பல ரகசியம் அறிந்து கொள்வதிங்கே
அஷ்டாக்ஷ்ரம் என்று அன்பு செய்வதுமங்கே
தேவாரம் திருவாசகம் படிப்பதிங்கே
திருவாய்மொழியோதி சேவிப்பதங்கே
அருமறைப் பொருளுக்கெட்டா வடிவமிங்கே
அறிதுயில் அணையானை ஆதரிப்பதங்கே
இப்பாடலை சஞ்சய் சுப்ரமணியம் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
Monday, December 12, 2011
Sunday, December 04, 2011
மெய்ப்பொருளின் சாயை
மகா காளியின் புகழ் | ||
ராகம்-ஆனந்த பைரவி தாளம்-ஆதி காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின்மீது காளிசக்தி என்றபெயர் கொண்டு-ரீங் காரமிட்டு உலவுமொரு வண்டு-தழல் காலும்விழி நீலவன்ன மூலஅத்து வாக்களெனும் கால்கள் ஆறுடையதெனக் கண்டு-மறை காணுமுனி வோருரைத்தார் பண்டு. மேலுமாகிக் கீழுமாகி வேறுள திசையுமாகி விணணுமண்ணு மானசக்தி வெள்ளம்-இந்த விந்தையெல்லா மாங்கதுசெய் கள்ளம்-பழ வேதமாய் அதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த வீரசக்தி வெள்ளம்விழும் பள்ளம்-ஆக வேண்டும் நித்தம் எந்தனேழை யுள்ளம் அன்புவடி வாகிநிற்பள் துன்பெலாம் அவளிழைப்பள் ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை-இதை ஆர்ந்துணர்ந்த வர்களுக்குண்டு உய்கை-அவள் ஆதியாய் அநாதியாய் கண்டவறி வாவளுன்தன் அறவுமவவள் மேனியிலோர் சைகை-அவள் ஆனந்தத்தின் எல்லை அற்ற பொய்கை. இன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள் இஃதெலாம் அவள்புரியம் மாயை-அவள் ஏதுமற்ற மெய்ப் பொருளின் சாயை-எனில் எண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர்நித்தம் எய்துவார்மெய்ஞ் ஞானமெனும் தீயை-எரித்த எற்றுவாரிந் நானெ னும்பொய்ப் பேயை. ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான் அங்குமிங்கும் எங்குமுள வாகும்-ஒன்றே யாகினால் உலகனைத்தும் சாகும்-அவை அன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்று மில்லை ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும்-இந்த அறிவுதான் பரமஞான மாகும். நீதியாம் அரசுசெய்வர் நிதிகள்பல கோடிதுய்ப்பர் நீண்டகாலம் வாழ்வர்தரை மீது-எந்த நெறியுமெய்துவர் நினைத்தபோது-அந்த நித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபத நீழலடைந் தார்க்கு இல்லையோர் தீது-என்றும் நேர்மைவேதம் சொல்லும்வழி யீது. மகாகளியின் புகழ் என்று தலைப்பிட்டு மகாகவி பாரதி வடித்த இந்த காவடிச்சிந்தினை இங்கே பாடிக் கேட்கலாம்: 1. எம்.எஸ் அம்மா 2. ராஜ்குமார் பாரதி ஆதியாய், ஆதியின் சோதியாய் அன்னையவள் இருப்பள்! பாதியாய் வேணியனின் மேனியதில் ஏகினாளோ! அங்கும் இங்கும் எங்கும் உள்ளாளே! எனினும் ஏதுமற்ற மெய்பொருளின் சாயையாமே! மெய்ஞானமென்று மேதினியில் இதனைச் சொல்வார்: சக்தியவள் இல்லாத பொருளுமில்லை. சக்தியவள் இல்லாமல் ஏதுமில்லை. இதையறியும் அறிவேதான் பரம ஞானமாகும்! எல்லாத் துயரமும் இதையறிந்தால் இல்லாமல் ஆகும். |
Subscribe to:
Posts (Atom)