Saturday, February 24, 2007

பார் அதி சின்னத்தனம் :-(

பார் அதி சின்னத்தனம்.

பாரதியை பழிக்கும்
தமிழனும் இனியும்
இருக்கின்றானே....

தன்மானத் தமிழனும்
தலைகுனிந்து - வெட்கித்
தலைகுனிந்து போனானே...

தமிழினி மெல்லச்சாகும்
என்றொருவன் சொன்னான்.

தமிழ் மறைந்தாலாவது
இன வெறியில்
மத வெறியில்
சாதி வெறியில்
சிக்கித் தள்ளாடும்
உளரல்கள் தமிழில்
வராதல்லவா?

தமிழ் மறைந்தாலாவது
தமிழில்
உளரல் இம்சைகள்
ஒடுங்குமல்லவோ?

இதற்காவது
தமிழினி சடுதியில்
சாகட்டும்.

சின்னத்தனத்தில்
சிக்கிய சிறுமதியார்
தொல்லைகளில் இருந்து
தமிழாவது தப்பிக்கட்டும்,
தமிழினி சடுதியில்
சாகட்டும்.

மடை திறந்து தமிழில் ராப்

யோகி மற்றும் நட்சத்திரா குழுவினர் 'வல்லவன்' என்ற தலைப்பில் புதியதொரு ஆல்பம் வெளியிட்டுள்ளனர்.

11 பாடல்கள் கொண்ட இந்த ஆல்பம் தயாரிக்க 18 மாதம் பிடித்ததாம்.

ராஜாவின் 'மடை திறந்து' பாடலின் ரீமிக்ஸ் ராப் வடிவத்தில் - நீங்களே கேட்டுப்பாருங்கள்!