மூலவர்: தீர்த்தபுரீஸ்வரர், அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர்
அம்பாள்: ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி
மின் ஒப்பானை, விண்ணோரும் அறிகிலார்
அன்னை ஒப்பானை, அரத்துறை மேவிய
தன் ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.
திருமணம் நடக்க இருந்த போது, சுந்தரரை வலிய வந்து இறவன் தடுத்தாட் கொண்டதையும், சுந்தரருக்காக இறைவனே தூது போனதையும் அறிவோம். ஆனால் அடுத்துப் பார்க்கப் போகும் பாடலில் தன் நண்பர் பாவனையை விட்டுவிட்டு பிழைத்துப்போக வழிதேடி தொடர்ந்து வந்ததாக இரங்குகிறார்!
ஏழாம் திருமுறையில், இப்பதிகப் பாடலில், சுந்தரமூர்த்திப் பெருமான் - ஒருவன் பிறந்தான்; பின் இறந்தான் என்று காலப்போக்கில் வெறும் சொல்லாக வாழ்க்கை கடந்து விடாமல் - பிழைக்கும் வழி கிட்டிட உன்னைத் தொடர்ந்தேன் என்கிறார். அவருக்காக அருள் செய்யவே, அகிலும் மணிகளும் இயற்கையாகவே தள்ளிக்கொண்டு நதியின் கரையை அடைவதுபோல், இயற்கையாகவே, வெண்மதி சூடிய பெருமான் நெல்வாயிலெனும் ஊரில் அரத்துறையில் கோயில் கொண்டான்.
கல்வாய் அகிலும் கதிர்மாமணியுங்
கலந்து உந்திவரும் நிவவின்கரைமேல்
நெல்வாயில் அரத்துறை நீடுறையுந்
நிலவெண்மதிசூடிய நின்மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்
சொல்லாய்க் கழிகின்ற தறிந்தடியேன்
தொடர்ந்தேன் உய்யப் போவதொர் சூழல்சொல்லே
- சுந்தரர் தேவாரம் (பதிகம் 7.3 பாடல் 1)
நிவவின் கரை - நிவா நதிக்கரை - தற்போது வடவெள்ளாறு. ஒரு சமயம் இந்த நிவா நதிக்கரையில் ஆதிசேஷன் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அவரது தவத்தை மெச்சி பெருமானும் அன்னையுடன் காட்சி அளித்தார். அவ்விடம் அன்றுமுதல் அரவம்+துறை = அரத்துறை என்று வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
பாலகன் திருஞான சம்பந்தர் இந்தத் தலத்திற்கு வருவதற்கு முன்பாக, அவரது பாத தாமரை நோகமல் இருக்க, இறைவனே முத்துச் சிவிகையும், முத்துக் குடையும், முத்துச் சின்னங்களையும் அவருக்கு வழங்கி இந்த தலத்திற்கு அழைத்து வரப்பெறுகிறார் என்கிறது பெரிய புராணம்.
அந்த முத்துச்சிவிகையில் ஏறுவதற்கு முன்பாக, மாறன்படியில் தான் ஏறி வருவதற்கு சிவிகை அனுப்பி வைத்த திருநெல்வாயில் அறத்துறை நாதனை "எந்தை ஈசன்" எனத் துவங்கும் பதிகம் பாடுகிறார் சம்பந்தப் பெருமான்.
எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவதன்றால்
கந்த மாமலர் உந்திக் கடும்புன னிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.
- சம்பந்தர் தேவாரம் (பதிகம் 2.90 பாடல் 1)
சிறப்பான தகவல்கள். எடுத்துக் காட்டிய பாடல்கள் சிறப்பு. நன்றி. திட்டக்குடி வழியே பல முறை சென்றிருந்தாலும் இக்கோவில் சென்றதில்லை.
ReplyDeleteவாருங்கள் வெங்கர் நாகராஜ். விருதாசலம் - திட்டக்குடி வழியில் மெயின் ரோடில் இல்லாமல், அதிலிருந்து பிரிந்து தெற்கே செல்லவேண்டும்.
Deleteகூகிள் மேப் இணைப்பு:
https://www.google.com/maps/place/NNT001-Thiruvattathurai+Shiva+Temple+Padal+Petra+Temple/@11.3852911,79.1879849,16z/data=!4m22!1m16!4m15!1m6!1m2!1s0x3bab4a796cb7ceaf:0xe7cd39ca29dbafb1!2sVirudhachalam,+Tamil+Nadu,+India!2m2!1d79.3268894!2d11.515868!1m6!1m2!1s0x3bab3bf0fe6a3d1d:0x9ba996c2a7393a2f!2sTittakudi,+Tamil+Nadu+606106,+India!2m2!1d79.1181599!2d11.4096412!3e0!3m4!1s0x3bab3a7076630aa9:0xbb887fd6792bb7dc!8m2!3d11.3817209!4d79.19053
கூகுள் மேப் படங்களையும் இணைக்கிறேன்.