Saturday, January 10, 2015

விடலைப் பருவமடி!

இன்று காலை கண் விழிக்கையில் மனதில் தோன்றிய வரிகள். மால் மருகன் முருகனை எண்ணி மருகும் பாடல் வரிகள்.

எடுப்பு
விடலைப் பருவமடி - அறியா
விடலைப் பருவமடி!

தொடுப்பு
வெகுண்டு விரைவாய் துடிக்குது மனது
வேட்கை அதனில் புதிதாய் புகுந்தது
விடலைப் பருவமடி - வெண்ணிலா
விடலைப் பருவமடி - அறியா
விடலைப் பருவமடி!

சரணம் 1
சுடலைப் பொடி பூசும் சுந்தரேசன் மகன்
சுகுணகுமாரன் சுந்தர ரூபனை நாடி
இகபரசுகம் பெறவே துடிக்கும்
விடலைப் பருவமடி - அறியா
விடலைப் பருவமடி!

சரணம் 2
விரைந்தெனைக் காண வேலவன் வருவான்
பரிவோடு என்னை பார்த்திட வருவான்
பாலகன் இவனை வாரி அணைத்து
ஆவலைத் தீர்க்க அன்பிலே தவிக்கும்
விடலைப் பருவமடி - அறியா
விடலைப் பருவமடி!

முடிப்பு
அறிந்தது யாவும் அகந்தையை தூண்டுது
அங்கம் எங்கும் அவித்தையே மிஞ்சுது
அறிந்தது யாவையும் அடியோடு மறக்க
அழகன் முருகனைக் காணத் துடிக்கும்
விடலைப் பருவமடி - அறியா
விடலைப் பருவமடி!

10 comments:

  1. அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Doesn't "viDalai" refer to a man of age between 16 and 30? Am I mistaken? You seem to imply here the word ViDalai refers to a young woman---right? I am confused about the content of the song.

    ReplyDelete
  3. பல மாதங்கள் கழிச்சுப் பார்த்த பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  4. @திண்டுக்கல் தனபாலன், @கீதாம்மா, வருகைக்கு நன்றிகள்!

    ReplyDelete
  5. @narada
    வருகைக்கு நன்றிகள்!

    விடலை - பதின்ம வயதுப் பருவம் - ஆண்/பெண் இருபாலருக்கும் பொருந்துமென நினைக்கிறேன். விக்கியில் இங்கு பார்க்கலாம்:

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D

    பாடலில் வெண்ணிலாவைத் தோழியாக பாவித்து தலைவி பாடுவதாகக் கொள்ளலாம். அறியாப் பருவத்தினை எடுத்துக் கொண்டு பாடினாலும் - என்ன தான் விஷயங்களை அறிந்தாலும், என்னதான் வயதானாலும் - அவன் அருளின்றி மெய்யறிவு கிட்டாது என்பது பூடகமாக சொல்லப்பட்டது. ஆகவே உலக அறிவை மறந்து தலைவனின் முகத்தைக் காண தலைவி விழைகிறாள்.

    ReplyDelete
    Replies
    1. OK, I get it. Thanks for the clarification. It is the adolescent stage for both genders.

      Delete
  6. வலை தனை மறந்து போய்விட்டீர்களோ என நினைத்திருந்தேன்.

    வள்ளி மணாளன் எழுப்பி விட்டு இருக்கிறான் போலும். !!

    வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.72.blogspot.com

    ReplyDelete
  7. உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில்
    அறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
    பார்க்கவும்: http://blogintamil.blogspot.in/

    ReplyDelete
  8. நன்றி மிகவு‌ம் பயனுள்ளதாக இருக்கிறது

    ReplyDelete