ஆகஸ்ட் 15, 1947 - சுதந்திரக் கொண்டாட்டங்களுக்கு இடையே நீங்கள் அகில இந்திய வானொலியின் ஒலிபரப்பைக் கேட்டிருந்தால் "ஜெயதி ஜெயதி பாரத மாதா!" எனத்தொடங்கும் கமாஸ் இராகப் பாடலைக் கேட்டிருக்க முடியும். பாரத தேசிய கீதத் தேர்வின் கடைசி சுற்று வரையிலுக் கூட இடம் பெற்ற இப்பாடலின் சொந்தக்காரர் - விஸ்வநாத சாஸ்திரி அவர்கள். ஜி.எம்.பி அவர்களின் ரெக்கார்டுகளிலும், டி.கே.பி யாலும் பெரிதும் பாடப்பட்டு பிரபலமானது இப்பாடல்.
மயூரம் விஸ்வநாத சாஸ்திரி (1893-1958) பல்வேறு இராகங்களில் பாடல்கள் புனைந்துள்ளார். இவருடைய பாடல் முத்திரை 'வேதபுரி' மற்றும் 'விஸ்வநாத' என்பதாகும். 'முருகன் புகழ்மாலை' மற்றும் 'முருகன் மதுர கீர்த்தனைகள்' போன்ற இசை நூல்களை ஸ்வரக் குறிப்புகளோடு வெளியிட்டுள்ளார்.
திருக்குறளை இசை வடிவத்தில் கொண்டு வந்த பெருமை இவரைச் சாரும். மூன்று முதல் ஒன்பது குறட்பாக்களை இணைத்து கிருதி வடிவில் பல்லவி-அனுபல்லவி-சரணம் முறையில் வழங்கியுள்ளார்.
2009 மார்கழி மகா உற்சவத்தின் போது - சஞ்சய் சுப்ரமணியம் மயூரம் விஸ்வநாத சாஸ்திரியின் பாடல்களை மட்டும் எடுத்துக் கொண்டு பாடி இருக்கிறார். இவற்றில் இரண்டு திருக்குறள் கிருதிகளும் அடங்கும். இப்பாடல்களுக்கான சுட்டிகள் இங்கே.
பகவன் முதற்றே உலகு - ஹம்சத்வனி
இந்த ஜாலமே - கமாஸ்
மயில் வாகனா - அமிர்தவர்ஷிணி
ஒழுக்கம் உயிரினும் - குந்தலவராளி
பாரத சாம்ராஜ்ய சுகி - தேஷ்

No comments:
Post a Comment